Header

Sri Lanka Army

Defender of the Nation

07th July 2022 15:06:20 Hours

இராணுவப் பெண் படையினரின் உரிய நடவடிக்கை காரணமாக கர்ப்பிணிப் பெண் பாதுகாப்பாக பிரசுவம்

பத்தரமுல்லையில் கடவுச்சீட்டைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த 26 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர், இன்று (7) காலை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள ஊழியர்களின் உதவியுடன் இராணுவப் பெண் சிப்பாய்களால் காசல் மகப்பேறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நேற்று மாலை (6) தனது கணவருடன் அங்கு சென்று வரிசையில் இணைந்த அப் பெண் ஹட்டன் - டிக்கோயா பகுதியைச் சேர்ந்தவராவார்.

இராணுவப் படையினரால் குறித்த பெண்ணை காசல் மகப்பேறு வைத்தியசாலைக்கு சரியான நேரத்தில் அனுப்பியதன் மூலம் அவர் ஒரு பெண் குழந்தையைப் பத்திரமாகப் பெற்றெடுக்க முடிந்தது. தாயும் குழந்தையும் இப்போது மருத்துவமனையில் இருக்கிறார்கள்