06th July 2022 17:14:01 Hours
65 வது படைப்பிரிவின் முன்னாள் தளபதியான மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி, 34 வருடங்களுக்கும் மேலாக முன்மாதிரியான அர்ப்பணிப்புள்ள போர்வீரராக சேவையாற்றி இராணுவத்தில் இருந்து ஓய்வுபெறும் தருவாயில், அவர், இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு புதன்கிழமை (6) அவரது குடும்ப உறுப்பினர்களுடன் அழைக்கப்பட்டதுடன் அங்கு அவரது அர்ப்பணிப்பு சேவைக்காக இராணுவத் தளபதியால் பாராட்டப்பட்டார்.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், தனது இறுதி அழைப்பின் போது அவரை பாராட்டியதுடன் பல்வேறு திறன்களில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான பாத்திரங்கள் மற்றும் இராணுவத்தின் மீதான அவரது விசுவாசம் மற்றும் அவரது ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாராட்டினார்.வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 65 வது படைப்பிரிவின் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், குறித்த கமாண்டோ படையணியின் சிரேஸ்ட அதிகாரி தனது பதவிக் காலத்தில், பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார்.
கலந்துரையாடலின் போது இராணுவத் தளபதி, இராணுவத்தை விட்டு ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்காலத் திட்டங்களைக் கேட்டறிந்ததுடன், நிகழ்வில் கலந்துகொண்ட அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும் அவரது பணியின் போது அர்ப்பணிப்புள்ள கமாண்டோவாக இருந்தமைக்கு இராணுவத் தளபதி தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரி, இராணுவத் தளபதியின் விருப்பத்திற்கும் சிந்தனைக்கும் நன்றி தெரிவித்ததுடன், தனது கடமைகளை நிறைவேற்றுவதில் தாம் பெற்ற ஊக்கம் பற்றிக் குறிப்பிட்டார். கலந்துரையாடலின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள், ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி அவர்களுக்கு பாராட்டுக்கான அடையாளமாக சிறப்பு நினைவுச் சின்னம் மற்றும் குடும்பத்திற்கு சிறப்பு பரிசும் வழங்கினார்.
மேஜர் ஜெனரல் அனில் சமரசிறியின் சுருக்கமான சேவை விவரம் பின்வருமாறு:
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தீவிரமாக பங்களித்த சிரேஷ்ட அதிகாரியான அவர் மிகவும் நம்பகமான, விசுவாசமான மற்றும் ஒழுக்கமான சிரேஷ்ட அதிகாரி ஆவார், அவர் தனது பணிகளை எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் செய்து, அமைப்பின் மிக உயர்ந்த சிறப்பை உறுதி செய்கிறார். அவர் ஆற்றிய சில சேவைகள்,இரண்டாவது கமாண்டோ படையணியின் அலுவலகம், 2 வது கமாண்டோ பிரிகேட்டின் பிரிகேட் மேஜர், கமாண்டோ படையணி பயிற்சி பாடசாலையின் பாராசூட் பயிற்சி பிரிவு தலைமை பயிற்றுவிப்பாளர், கமாண்டோ படையணி பயிற்சி பாடசாலை தலைமை பயிற்றுவிப்பாளர், 2வது கமாண்டோ படையணி கட்டளை அதிகாரி, 3 வது கமாண்டோ படையணி கட்டளை அதிகாரி, 5 வது கமாண்டோ படையணி கட்டளை அதிகாரி,இலங்கை அமைதி ஒத்துழைபப்பு நடவடிக்கை பயிற்சி நிறுவன தலைமை பயிற்றுவிப்பாளர், கமாண்டோ படையணி பயிற்சி பாடசாலை தளபதி, 2009 இல் இராணுவத் தளபதியின் பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரி, இராணுவ பயிற்சி பணிப்பக கேணல் பயிற்சி அதிகாரி, 512 வது காலாட்படை பிரிகேட் அலுவலக தளபதி, 233 வது காலாட்படை பிரிகே் அலுவலக தளபதி, கமாண்டோ பிரிகேட் தளபதி, பணிப்பாளர் அதிகாரி தொழிலாண்மை மேம்பாட்டு மைய நடவடிக்கை கிளையின் நடவடிககை அதிகாரி, மாதுரு ஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சிப் பாடசாலை கட்டளைத் தளபதி மற்றும் 65 வது பிரிவின் தளபதி உள்ளிட்ட நியமனங்களை வகித்துள்ளார்.
மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி, ரண விக்கிரம பதக்கம (இரண்டு முறை விருது), ரண சூர பதக்கம, உத்தம சேவா பதக்கம, கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம் மற்றும் கிளாஸ்ப், வடக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம் மற்றும் கிளாஸ்ப், பூர்ண பூமி பதக்கம, வடக்கு, கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். பிரச்சார சேவை பதக்கம் மற்றும் கிளாஸ்ப், 50 வது சுதந்திர ஆண்டு நினைவு பதக்கம், இலங்கை இராணுவத்தின் 50 வது ஆண்டு பதக்கம், இலங்கை ஆயுத சேவைகள் நீண்ட சேவை பதக்கம் மற்றும் கிளாஸ்ப், சேவாபிமானி பதக்கம், சேவா பதக்கம் மற்றும் விதேச சேவா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுள்ளார்.
மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி, 1988 ஆம் ஆண்டு ஒக்டோபர் 06 ஆம் திகதி இரத்மலானையில் உள்ள ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் கெடட் அதிகாரி இலங்கை இராணுவத்தின் நிரந்தர சேவை படையில் இணைந்தார். தியத்தலாவ – இலங்கை இராணுவ கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததன் பின்னர், அவர் இரண்டாவது லெப்டினன்ட் பதவியில் நியமிக்கப்பட்டடதுடன் 05 அக்டோபர் 1990 இல் கொமாண்டோ படைப்பிரிவுக்கு நியமிக்கப்பட்டார். பின்னர் இராணுவத்தில், அவர் 02 ஓகஸ்ட் 2021 அன்று மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார்.
2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ஸ்கைடைவிங் சாதனைகளுக்காக அவருக்கு கமாண்டோ நிறங்கள் மற்றும் இராணுவ வர்ணங்கள் வழங்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த சிரேஷ்ட அதிகாரி, காலாட்படை பட்டாலியன் தளபதியாக போர்க்களத்தில் முன்னணி பாத்திரத்தை வகித்தார்; குறிப்பாக மனிதாபிமான நடவடிக்கையின் காலத்தில். பொதுவாக இராணுவத்திற்குச் செய்யப்பட்ட அர்ப்பணிப்புச் சேவையை அங்கீகரிப்பதற்காக, அவர் 65 வது காலாட்படைப் பிரிவின் ஜெனரல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார், இது மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள ஒரு சிரேஷ்ட அதிகாரியால் நடத்தப்படக்கூடிய மிகவும் சிரேஷ்ட மற்றும் மதிப்புமிக்க நியமனங்களில் ஒன்றாகும். அவரது பெருமைக்கு, அவர் பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கல்வியினை பயின்றுள்ளார்.