06th July 2022 15:25:56 Hours
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமது இராணுவ வாழ்க்கையில் தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக அவர்கள் செய்த சொல்ல முடியாத துன்பங்களையும் ஈடு இணையற்ற தியாகங்களையும் நினைவுகூறும் வகையில், காலி புனித அலோசியஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், அதன் கொழும்பு பழைய மாணவர் சங்கம், அதிபர், முன்னாள் அதிபர்கள். மற்றும் ஆசிரியர்களினால் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற வைபவத்தில், கல்லூரி வளாகத்தில் பழைய மாணவர்களான இராணுவத்தின் பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவாக்கு மற்றும் முப்படை போர் வீரர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.
அன்றைய பிரதம அதிதியான மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்கள், அவரது பழைய முன்று முப்படை கல்லூரி நண்பர்கள் மற்றும் வகுப்பு நண்பர்கள் ஆகியோருடன் அங்கு வந்தடைந்ததனைத் தொடர்ந்து பாராட்டு விழா ஆரம்பமானது. அதிபர் திரு அருண கமகே அவர்கள் வருகை தந்த அனைவரையும் கல்லூரியின் கெடட் இசைக்குழுவின் மத்தியில் அழைத்துச் சென்றார். பின்னர் அழைப்பாளர்கள் பாரம்பரிய எண்ணெய் விளக்கை ஏற்றியதுடன், மத சடங்குகளுக்கு மத்தியில் நிகழ்வுகள் ஆரம்பமானது.நிகழ்ச்சி நிரலில் முதல் விடயமாக, கல்லூரி வளாகத்தினுள் உயிர் நீத்த போர்வீரர்களின் நினைவுச் சின்னத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவதற்கு மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் அழைக்கப்பட்டார். இந்த நிகழ்வு மகா சங்கத்தினரின் “செத்பிரித்” பராயணங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது. 9 இராணுவ அதிகாரிகள், 7 சிப்பாய்கள் மற்றும் கடற்படையின் சிப்பாய்கள் உட்பட மொத்தம் 16 அலோசியன் போர்வீரர்கள், தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது உயிர் தியாகத்தை செய்துள்ளனர்.
கல்லூரியின் ஓரியண்டல் இசைக்குழு தலைமையில் வருகை தந்த அனைவரும் பாராட்டு விழா நடைபெறும் பகுதிக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். முறையே பிரதம அதிதி, அதிபர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் ஆகியோரால் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமானது.அதிபரின் வரவேற்பு உரையின் பின்னர், கொழும்பு பழைய மாணவர் சங்க கிளையின் சிரேஷ்ட உறுப்பினர் கலாநிதி கோலித லெல்வல, இந்த அளவிலான இந்த பாராட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கான காரணங்கள் மற்றும் அனைவரது ஆதரவுடன் அந்த மறக்க முடியாத போர் வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது என்பது தொடர்பாக உரையாற்றியதுடன் அலோசியஸ் கல்லூரியின் பழைய மாணவர்களான 7 சேவையிலுள்ள அதிகாரிகள் மற்றும் 3 ஓய்வுபெற்ற அதிகாரிகளின் விலைமதிப்பற்ற இராணுவ சேவைகள் இந்த நிகழ்வின் போது பாராட்டப்பட்டன.
பாராட்டு விழாவின் முதல் கட்டமாக, மேஜர் ஜெனரல் (ஓய்வு) சேனக விக்ரமரத்ன, மேஜர் ஜெனரல் (ஓய்வு) பாலித பெர்னாண்டோ, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரத்னசிறி கனேகொட மற்றும் தற்போது சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக இருக்கும் மேஜர் ஜெனரல் (ஓய்வு) நெவில் ரஞ்சன் லமாஹேவகே ஆகியோர் அவர்களின் வீரத்தின் கதைகளை ஆவணப்படுத்திய விருதுகள் மற்றும் தனித்தனி பாராட்டுப் ஆவணங்களை பெற மேடைக்கு அழைக்கப்பட்டனர்.நிகழ்வின் இரண்டாவது கட்டமாக அலோசியஸ் கல்லூரியின் பழைய மாணவரான எயார் வைஸ் மார்ஷல் லலித் ஜயவீர, ரியர் அட்மிரல் நெவில் உபேசிறி, மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி, மேஜர் ஜெனரல் சமிந்த லமாஹேவா மற்றும் மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே ஆகியோர் கௌரவிக்கப்பட்டன.
அன்றைய பிரதம அதிதியாக இலங்கை இராணுவத்தின் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு அவரது நினைவுச் சின்னத்தைப் பெற்றுக் கொண்டு கௌரவிப்பு மற்றும் மறைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதால் அன்றைய நிகழ்வுகள் உச்சக்கட்டத்தை எட்டின.இந்த விருதுகளை புகழ்பெற்ற அலோசியனுக்கு வழங்குவதில் அதிபர் மற்றும் பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்றைய பிரதம அதிதியான மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு, ஏற்பாட்டாளர்கள் மற்றும் பழைய நண்பர்களுக்கு நன்றி தெரிவித்த பின்னர், தனது கல்லூரி நாட்களில் தனது பொன்னான நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டார். அவர் இன்னும் உயிருடன் அல்லது மறைந்த அவரது வழிகாட்டிகள் மற்றும் ஆசிரியர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தினார், மேலும் கல்லூரியில் தனது குழந்தைப் பருவத்தில் அழியாத நினைவுகள் என்று அவர் கூறிக்கொண்ட குறிப்பிடத்தக்க இரண்டு நிகழ்வுகளை மேற்கோள் காட்டினார்.நிகழ்வுகளின் முடிவில், இராணுவத் தலைமையகத்தின் காலாட்படை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே அவர்கள் பாடசாலை படிப்பிற்குப் பிறகு இராணுவத்தின் அதிகாரிகளாகச் சேர்ந்த 20 சக மாணவர்களின் துணிச்சலைப் தனித்தனியாகப் பாராட்டினார். நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் மிக உயர்ந்த தியாகம் செய்த அவரது கடந்த கால வகுப்பு தோழர்கள் (83/86 குழு), அதாவது மறைந்த கேணல் ரிஸ்லி மீடின், லெப்டினன் கேணல் பிரியந்த டி சில்வா மற்றும் கெப்டன் நயனாநந்த ஹெட்டியாராச்சி ஆகியோரை நினைவு கூர்ந்தார்.
பிரதி அதிபர் திரு ஷான் ஜகொட அவர்களின் நன்றியுரையுடன் அன்றைய பாராட்டு விழாவை நிறைவு பெற்றது.