05th July 2022 16:01:28 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, அவர்களின் ஆலோசணையின் பேரில் ஐந்து பேர் கொண்ட இராணுவ நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள் மற்றும் அதன் பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்துப் பணிகளில் இருந்தும் யக்கஹபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரி இடைநிறுத்தப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நேரில் கண்ட சாட்சிகள் அனைவரின் வாக்குமூலங்களையும் பதிவு செய்வதற்கு இலங்கை இராணுவ பொலிஸ் படையணி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இராணுவத் தளபதியின் பணிப்புரையின் பேரில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் திங்கட்கிழமை (4) இந்த சிரேஷ்ட அதிகாரியின் நடத்தை தொடர்பாக ஆராய்வதற்கு பிரிகேட் தளபதியின் தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசாரணை நீதி நீதிமன்றத்தை நியமித்துள்ளது.