04th July 2022 16:55:47 Hours
கொழும்பில் அமைந்துள்ள அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் இயன் கெய்ன் இன்று (4) காலை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
அமோக வரவேற்பின் பின்னர், இருவரும் இலங்கை இராணுவம் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பொதுவான விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.
லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இராணுவப் பயிற்சித் துறையில் அவுஸ்திரேலிய ஆயுதப் படைகள் வழங்கிய பொதுவான ஆதரவிற்காக வருகை தந்த தூதுவருக்கு நன்றி தெரிவித்தார்.
இடம்பெற்ற கலந்துரையாடலின் இறுதியில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் அவுஸ்திரேலிய தூதுவருக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி இரு அமைப்புகளுக்கும் இடையில் நிலவும் நல்லுறவை அடையாளப்படுத்தினார்.