02nd July 2022 21:09:02 Hours
இன்று (2) காலை முதலாவது படைத் தலைமையகத்தின் 53 மற்றும் 58 வது படைப்பிரிவின் கட்டளைக்குட்பட்ட படையினருக்கு புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் உரையை ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் வைத்து செவிமடுத்தனர். இவ் நிகழ்வில் சமூகத்தின் முன்னேற்றங்கள் மற்றும் இந்த முக்கியமான கட்டத்தில் இராணுவ வீரர்களின் பங்கு மற்றும் பணிகள் என்பவை பற்றி இராணுவ தளபதி உரைநிகழ்த்தினார்.
இராணுவத் தளபதி தனது விரிவான உரையின் போது பொதுவாக இராணுவத்தின் பங்கு மற்றும் பணிகள், அதன் தற்போதைய பாதுகாப்பு ஈடுபாடுகள், பொலிஸ் மற்றும் பிற ஆதரவான கூறுகளுடன் உறவுகளைப் பேணுதல், சிவில்-இராணுவ ஒத்துழைப்பு, முடிவெடுத்தல், நடைமுறை அணுகுமுறைகள் மற்றும் சாத்தியக்கூறுகள், உரையாடல் மூலம் தீர்வு காண்பதற்கு, தற்போதைய பதற்றம் மற்றும் நெருக்கடியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உதவுதல், நல்லெண்ணம் மற்றும் கட்டுப்பாட்டைப் பேணுதல், பொதுமக்களின் துடிப்பு மற்றும் உணர்வுகளைப் பேணுதல், இராணுவத்தின் கண்ணியம் மற்றும் ஒழுக்கத்தைப் பேணுதல், அனைத்து மட்டங்களிலும் இராஜதந்திரத்தை ஏற்றுக்கொள்வது போன்றவை பற்றி உரைநிகழ்த்தப்பட்டது.
தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதற்கான ஒரு வலிமையான இருப்புநிலையாக சமகால பாதுகாப்பு இயக்கவியலுடன் நன்கு இணைந்த முதலாவது படையணி படையினரை ஒழுங்கமைக்கவும், சித்தப்படுத்தவும், பயிற்றுவிக்கவும் மற்றும் பராமரிக்கவும் "இலங்கை இராணுவ முன்னோக்கி வியூகம் 2020-2025" உடன் பொருந்துவதற்கு தேசத்தின் பாதுகாப்பிற்கான தடுப்புப் படையாக உடனடி பணிகளை மேற்கொள்ளத் தயாராக இருக்கும் வகையில் பயிற்சி பெற்றுள்ளனர்.
லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் உரையாற்றுகையில், கடினமான சூழ்நிலைகளில் இராணுவத்தின் தொழில்முறை தரத்தையும் அதன் பெருமைமிக்க கௌரவத்தையும் பேண வேண்டியதன் அவசியத்தை கோடிட்டுக் காட்டினார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான எங்கள் அர்ப்பணிப்பு எப்போதும் எங்கள் முன்னுரிமையாகும், மேலும் அரசியலமைப்பு மற்றும் மக்களைப் பாதுகாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பதற்றம், சலசலப்பு அல்லது எந்த வகையான சவால்கள் இருந்தாலும் பொறுமை, பணிவு, கட்டுப்பாடு மற்றும் சிறந்த நடத்தை நடைமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூட்டத்தில் கூறினார்.
முதலாவது படைப்பிரிவின் தளபதி,மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன, 53 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உதய ஹேரத், 58 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் விபுல இஹலகே மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் இந்த ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். இந் நிகழ்வில் இராணுவ தளபதியினை முதலாம் படை தளபதி வரவேற்றார்