01st July 2022 19:58:05 Hours
தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர (ஓய்வு) வெள்ளிக்கிழமை (01) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது வருகை தந்த தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தளபதி, முப்படை, பொலிஸ் மற்றும் பொது சேவைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு மூலோபாய சிந்தனையை ஊக்குவிக்கும் முதன்மையான நிறுவனமாக சமீபத்தில் நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் முன்னேற்றம் மற்றும் முழுமையான அறிவை எவ்வாறு வழங்குகிறது என்பது குறித்து இராணுவத் தளபதிக்கு விளக்கினார். மேலும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய அபிவிருத்தியை உறுதி செய்வதற்காக தேசிய பாதுகாப்பு, அரச தொழில், இராஜதந்திரம் மற்றும் பொதுக் கொள்கை ஆகிய துறைகளில் உயர் தகுதி வாய்ந்த மூலோபாய முடிவெடுப்பவர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. இந்த கலந்துரையாடலின் போது நிர்வாகத் தன்மையின் பல விடயங்களும் இராணுவத் தளபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் வளர்ச்சிக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார், இதை தொடர்ந்து தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், தேசிய பாதுகாப்புக் கல்லூரியானது எதிர்காலத்தில் உலகின் சிறந்த கல்லூரியாக திகழ தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர (ஓய்வு) இராணுவம் அதன் ஆரம்ப கட்டங்களில் இருந்து வழங்கப்பட்ட ஆதரவை நன்றியுடன் ஏற்றுக்கொண்டதுடன், புதிய இராணுவத் தளபதியிடம் அதே ஒத்துழைப்பைத் தறுமாறு கேட்டுக் கொண்டார்.
உரையாடலின் முடிவில், இராணுவத் தளபதி தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தளபதிக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.