02nd July 2022 21:12:15 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இன்று (2) பனாகொட மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டதுடன், மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் அதன் கட்டளையின் கீழ் உள்ள 14 மற்றும் 61 படைப்பிரிவுகளில் சேவையாற்றும் படையினருக்கு உரை நிகழ்த்தினார். பனாகொட இராணுவ உடற்பயிற்சி கூட வளாகத்தில் நான்கு இலக்கங்களுக்கு மேற்பட்ட பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் இந்த உரை இடம்பெற்றது.
எதிர்காலத்தில் இராணுவத்திற்கான தனது பார்வையை அமைத்து, தற்போதைய பிரச்சினைகள் மற்றும் பதட்டமான சமூக முன்னேற்றங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி, இராணுவத்தின் பங்கு மற்றும் பணிகள், பொலிஸ் மற்றும் பிற ஆதரவான கூறுகளுடன் உறவுகளைப் பேணுதல், அதன் நிகழ்காலம் மற்றும் பாதுகாப்பு ஈடுபாடுகள், சிவில்-இராணுவ ஒத்துழைப்பு, முடிவெடுத்தல், நடைமுறை அணுகுமுறைகள் மற்றும் உரையாடல் மூலம் தீர்வுக்கான சாத்தியங்கள், தற்போதைய நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவுதல், நல்லெண்ணம் மற்றும் கட்டுப்பாட்டைப் பேணுதல், மக்களின் துடிப்புகள் மற்றும் உணர்வுகளின் சரியான கருத்து, பராமரித்தல் இராணுவ கண்ணியம் மற்றும் ஒழுக்கம், அனைத்து மட்டங்களிலும் இராஜதந்திரத்தை பேணிதல் போன்றவை பற்றி இவ் உரையில் கூறப்பட்டது.
மேல் மாகாணத்தில் மக்கள் செறிந்து வாழும் கொழும்பு பிரதேசத்தில் பொது மக்களை ஈர்க்கக்கூடிய விதத்தில் இன்றுவரை சேவையாற்றிய படையினரை தளபதி பாராட்டினார்.
உரையின முடிவில், மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்லா அவர்கள் இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கி நன்றி பாராட்டினார்.
14 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த விக்கிரமசேன, 61 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மோகன் ரத்நாயக்க, பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ முகாமில் உள்ள அனைத்துப் படைத் தலைமையகங்களின் பிரதிநிதிகள் இராணுவத் தளபதியின் உரையை கேட்பதற்கு அங்கு வருகைதந்திருந்தனர்.