Header

Sri Lanka Army

Defender of the Nation

29th June 2022 16:05:17 Hours

பாதுகாப்பு சேவைக் கட்டளைகள் மற்றும் பதவி நிலை கல்லூரியின் புதிய தளபதி இராணுவ தளபதியை சந்திப்பு

சப்புகஸ்கந்தவிலுள்ள பாதுகாப்பு சேவைக் கட்டளைகள் மற்றும் பதவி நிலை கல்லூரியின் புதிய தளபதியாக அண்மையில் நியமனம் பெற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் புதன்கிழமை (29), இராணுவத் தலைமையகத்திலுள்ள இராணுவ தளபதியவர்களின் அலுவலகத்தில் இராணுவ தளபதி தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு சேவைக் கட்டளைகள் மற்றும் பதவி நிலை கல்லூரியின் பாடத்திட்டம், எதிர்கால மேம்பாடுகள், நிர்வாக மற்றும் செயல்பாட்டு விடயங்கள், மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன. இதன்போது, மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, இராணுவத் தளபதிக்கு பாராட்டுக்களை தெரிவித்ததுடன், முப்படையினருக்கான சிறந்த கல்விப் பிரிவாகப் புகழ் பெற்ற பாதுகாப்பு சேவைக் கட்டளைகள் மற்றும் பதவி நிலை கல்லூரிக்கு தனது சிறந்த சேவைகளை வழங்குவதாகவும், முப்படையினர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிறந்த ஆதரவைத் பெற்று அதன் நடவடிக்கைகளை சுமூகமாக மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

இக் கலந்துரையாடலின் போது, லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே மேற்படி அதிகாரியின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், வெளிநாட்டு பயிலிளவல் அதிகாரிகளை ஈர்க்கும் வகையில் பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் பதவி நிலை கல்லூரியின் தரத்தை மேலும் உயர்த்துவதற்கு முடிந்தவற்றை செய்யுமாறு தெரிவித்தார். சந்திப்பின் நிறைவில் இராணுவ தளபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் அவர் வழங்கி வைத்தார்.