Header

Sri Lanka Army

Defender of the Nation

20th June 2022 16:27:30 Hours

இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைக்காக பாராட்டு

இலங்கை பொறியியலாளர் படையணி படைத் தளபதியும் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதியுமான இலங்கை பொறியியலாளர் படையணியின் மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் அவர்கள் 35 வருடங்களுக்கும் மேலான தனது சேவையை முடித்துக் கொண்டு இராணுவத்தில் இருந்து ஓய்வுபெறும் தருவாயில் உள்ளமையால் திங்கட்கிழமை (20) இராணுவத் தலைமையகத்தில் அமைந்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி, மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் அவர்களின் 35 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு பதவிகளில் பணிகள் மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதையும், அவரது முன்மாதிரியான நடத்தையையும் பாராட்டினார்.

மனிதாபிமான நடவடிக்கைகளின் போது அவர் ஆற்றிய தியாகங்களை நினைவுகூர்ந்த அவர், 5 வது களப் பொறியியலாளர் படையணியின் கட்டளை அதிகாரியாக தனது கடமைகளை ஆற்றிய அவர், மேற்கு கடற்கரையை கிழக்கு கடற்கரையுடன் இணைக்கும் 2007-டிசம்பர் 2008 மார்ச் வன்னி பகுதி சமர்களில் போது காயமடைந்தார். கடினமான நிலைமையின் போது அனைத்து கள அமைப்புகளுக்கும் போர் பொறியியல் ஆதரவை வழங்கினார்.

அதேபோன்று, இராணுவத் தளபதி, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் தொழில்முறை சட்ட ஆலோசகராக இராணுவத்தின் சார்பில் செய்யப்பட்டதையும், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் தற்போதைய நியமனத்திற்கு முன்னதாக, இராணுவ தலைமையகத்தில் பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாக அவர் தனது சேவைகளை வழங்கிய விதத்தையும் பாராட்டினார்.

1990 ஆம் ஆண்டு இரண்டாம் ஈழப் போர் பிரகடனத்திற்குப் பின்னர் கிழக்குத் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.காயங்களில் இருந்து மீண்டு வந்த அவர், உடல் ஊனமுற்ற போதிலும் தீவிரமான போர்களில் துணிச்சலுடன் தனது சேவையை ஆற்றினார். மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத், இலங்கை இராணுவத்தில் 35 வருடங்களுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன், தனது பணிகளை களங்கமற்ற சேவையை வழங்கியதன் மூலம், ஒழுக்கத்தின் மிக உயர்ந்த தரங்களைக் கடைப்பிடித்துள்ளார்.

யுத்தத்தின் போது காயமுற்ற காரணத்தினால் தேச புத்திர பதக்கம், உத்தம சேவை பதக்கம், 50 வது சுதந்திர தின பதக்கம், இலங்கை இராணுவத்தின் 50 வது ஆண்டு பதக்கம், வடக்கு மற்றும் கிழக்கு செயல்பாட்டு பதக்கம், பூர்ண பூமி பதக்கம், ரிவிரேச நடவடிக்கை பதக்கம், இலங்கை இராணுவத்தின் நீண்ட கால சேவை பதக்கம். மற்றும் ரண சூரா பதக்கம் (ஆர்எஸ்பி) ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரி இராணுவத் தளபதியின் விருப்பத்திற்கும் சிந்தனைக்கும் நன்றி தெரிவித்ததுடன், இராணுவத் தளபதியிடமிருந்து தனது கடமைகளை நிறைவேற்றுவதில் தாம் பெற்ற ஊக்கம் பற்றிக் குறிப்பிட்டார். மேலும் கலந்துரையாடலின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத்துக்கு பாராட்டு மற்றும் சிறப்பான நினைவுச் சின்னத்தையும் வழங்கினார்.

இலங்கை பொறியியலாளர் சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி மிஹிரி ஹேரத் மற்றும் அவர்களது இரண்டு மகள்களும் இராணுவ தளபதியின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.