18th June 2022 15:58:26 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படையின் 49 வது தளபதியாக மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள் வியாழக்கிழமை (16) கொஸ்கமவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ தொண்டர் படை தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வருகை தந்த புதிய தளபதிக்கு நுழைவாயிலில் வைத்து இலங்கை இராணுவ தொண்டர் படையின் பிரதி தளபதியான மேஜர் ஜெனரல் ஷேன் குணவர்தன அவர்கள், வரவேற்றதுடன் கஜபா படையணியின் சிப்பாய்களால் வழங்கப்பட்ட காவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதையின் பின்னர், அணிவகுப்பு மைதானத்தில் அவருக்கான அணிவகுப்பு மரியாதையும் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 'செத்பிரித்' பரயாணம் மற்றும் பௌத்த மத சடங்குகளின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில், சிரேஷ்ட அதிகாரி, தனது புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டதை அடையாளப்படுத்தும் வகையில், உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். பின்னர், புதிய அலுவலகத்தினை பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வை குறிக்கும் வகையில் சிரேஷ்ட அதிகாரி வளாகத்தில் மரக்கன்றினை நட்டு வைத்தார்.
வருகை தந்த தளபதி அனைவருக்குமான உரையில் அனைவருக்கும் அன்பான வரவேற்புக்காக தனது நன்றியைத் தெரிவித்ததுடன், தொண்டர் படை தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் சேவையாற்ற விரும்புவதாக கூறினார். இதனை தொடர்ந்து போர்வீரர்கள் மற்றும் மனிதாபிமான நடவடிக்கையில் காயமடைந்த போர் வீரர்களின் சேவைகளை அவர் கௌரவத்துடன் நினைவு கூர்ந்தார்.
பின்னர், புதிய தளபதி, இராணுவ தொண்டர் படை பிரதி தளபதி, இராணுவ தொண்டர் படையணியின் முதன்மைப் பதவி நிலை அதிகாரி மற்றும் அனைத்துக் கிளைத் தலைவர்களும், பணிபுரியும் உறுப்பினர்கள் மற்றும் தலைமையகத்தின் அதிகாரிகளுடன் இணைந்து அனைத்து படையினர்களுடனான தேநீரில் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டு, இராணுவ தொண்டர் படை சிரேஷ்ட அதிகாரிகளுடன் நினைவு சின்னமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். படையினர் மற்றும் அனைத்து வெளிப்புற அலகுகளுடன் சூம் தொழி்நுட்ப வீடியோ காட்சியுடன் உடன் அன்றைய நடவடிக்கைகளை நிறைவுக்கு வந்தது.