Header

Sri Lanka Army

Defender of the Nation

16th June 2022 18:36:10 Hours

எதிர்கால திட்டங்கள் மற்றும் அபிவிருத்திக்கான திட்டமிடல்கள் தொடர்பில் இராணுவ தளபதி விளக்கம்

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இலங்கை இராணுவத்தின் 24 வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர், தனது எதிர்காலத் திட்டமிடல்கள் மற்றும் தொலைநோக்குச் செயற்றிட்டங்கள தொடர்பில் இராணுவ தலைமையகத்தின் படையினருக்கு விளக்கமளிப்பதற்கான உரையொன்றினை இராணுவ தளபதி இன்று (16) காலை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில், விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உயிர்நீத்த போர்வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் நினைவாக அவர்களை நினைவுகூர்ந்த அதேநேரம் தனது பெற்றோர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களையும் நினைவுகூர்ந்தார். அதேபோல் மிக உயர்ந்த பதவியொன்றை வழங்குவதற்காக தன்னை தெரிவு செய்த ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னார் இராணுவ தளபதி ஆகியோருக்கு நன்றி தெரிவித்ததோடு, போரில் காயமடைந்த இராணுவ வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

எனது முன்னோடியான பாதுகாப்பு பதவி நிலை பிரதானியவர்கள் இராணுவத்தின் முன்னேற்றத்திற்கு அவசியமான பல்வேறு திட்டமிடல்களை நடைமுறைப்படுத்தியிருந்தமைக்காக அவருக்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும், மூலோபாய ரீதியான பல்வேறு புதிய அணுகுமுறைகள் மற்றும் படையினரின் தொழில்தரம் மற்றும் பல்துறைசார் திறன்களை வலுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட “இராணுவத்தின் முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020 – 2025” திட்டமிடலை முன்னெடுத்துச் செல்வது அவசியமெனவும், கொவிட் – 19 தொற்றுநோய் பரவலை தடுப்பதற்கான செயற்பாடுகளின் போது ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் படையினருடன் இணைந்து ஆற்றிய பங்களிப்பு என்றும் மறக்க முடியாததெனவும் தெரிவித்தார்.

மேலும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயார் நிலையிலிருக்கும் அமைப்பு என்ற வகையில் இராணுவ வீரர்கள் தேசத்தை கட்டியெழுப்பும் பணிகள், பேரிடர் தவிர்ப்பு பணிகள் மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள முகாம்களில் பயிர்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட செயற்பாடுகளை அர்பணிப்புடன் மேற்கொள்வதன் மூலம் நாட்டு மக்களின் மனங்களை வெற்றிக்கொண்டு மக்களின் மரியாதைக்கும் பாத்திரமாக விளங்கும் இராணுவத்தின் நற்பெயரை தொடர்ந்தும் பாதுகாக்க உதவுமெனவும் தெரிவித்தார்.தனக்கு கஜபா படையணியின் ஸ்தாபக தந்தையவர்கள் மற்றும் தற்போதைய பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஆகியோர் வழங்கிய அறிவுறுத்தல்கள் தனது பணிகளை எளிதாக மேற்கொள்ள உதவியாக அமையுமெனவும் தெரிவித்தார்.

இலங்கையின் அரசியலமைப்புக்கமைய நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கின்ற அதேநேரம் தொழில்சார் தகைமைமைகளை பேணுதல், மக்கள் பாதுகாப்பை உறுதிச் செய்தல், உள்நாட்டு மற்றும் வெளிப் பகுதிகளிலிருந்து நாட்டிற்கு ஏற்படும் சவால்களை முறியடித்தல் என்பவற்றோடு நாட்டின் பாதுகாப்புச் செயற்பாடுகளுக்கான கடற்படை மற்றும் விமானப்படை மற்றும் பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட சகோதர அமைப்புக்கள் மேற்கொள்ளும் பணிகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டியது அவசியமான தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.மூலோபாய அடிப்படையிலான செயற்பாடுகன் என்னும் போது, புதிய தொழில்நுட்ப மற்றும் நடைமுறை அம்சங்களுக்கு ஏற்றதாக பாதுகாப்பு நுட்பங்களை மாற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியம் ஜனநாயக கட்டமைப்பின் கீழ் பணியாற்றும் போது மேற்படி விடயங்களை கையாளும் விதம் என்பன தொடர்பிலும் எடுத்துரைத்தார்.

மேலும் படைப்பிரிவொன்றின் தளபதியாகவும் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாகவும் நியமனங்களை வகித்த போது, இராணுவ பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் பணியாற்றிய போதும் நிர்வாக மற்றும் வழங்களை முகாமைத்துவம் செய்வது தொடர்பிலான சிறந்த அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் அனைத்து தரப்புக்களினதும் நலன்புரிதல் செயற்பாடுகள் மற்றும் இராணுவத்தின் எதிர்கால மேம்பாட்டிற்கு அவசியமான அனைத்து திட்டங்களையும் மேற்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.

“சமீபத்தில், கண்டி இராணுவ மருத்துவமனை மற்றும் ஹொக்கி மைதானத்தின் முன்னேற்றத்தை பார்வையிடுவதற்காக நான் விஜயம் செய்தேன். அந்த வசதிகள் விரைவில் அனைவருக்கும் திறக்கப்படும். எதிர்காலத்தில் ஐ.நா. அமைதி காக்கும் பணிகளுக்கு செல்வதற்கும், இராணுவ விளையாட்டுகளின் தரத்தை உயர்த்துவதற்கும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.அதேநேரம் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரின் எந்தவொரு தவறான நடத்தைகளையும் தான் அனுமதிக்கப்போவதில்லை எனத் தெரிவித்த லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடமளிக்கபோதவில்லை என்றும் வலியுறுத்தினார். தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேவேளை அவர்களை ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

நாட்டின் அண்மையில் நிலவிய அமைதியின்மை நிலைமையகளின் போது அதிகாரிகளின் பொறுமையான மற்றும் முன்மாதிரியாக நடவடிக்கைகளை தான் வரவேற்பதாக தெரிவித்த அவர், ஜனாதிபதியவர்களின் “சுபீட்சத்திற்கான நோக்கு” கொள்கைத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அவசியமான பங்களிப்புக்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் அதற்கமைவான திட்டங்களை முன்னெடுப்பதற்கு அவசியமான இயந்திரங்கள், தொழில்நுட்ப தெரிவு மற்றும் மனிதவளம் ஆகியவற்றை வழங்கும் அதேநேரம் விவசாய பயிர்செய்கைகளை மேம்படுத்துவதற்கு அவசியமான ஆதரவை வழங்குவதற்கு இராணுவத்திலுள்ள விவாசாய மேம்பாட்டு தரப்புக்கள் அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

மேற்படி உரையை நிகழ்த்துவதற்காக வருகை தந்த லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்களுக்கு இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு மற்றும் பிரதி பதவி நிலை பிரதானி சன்ன வீரசூரிய ஆகியோரால் வரவேற்பளிக்கப்பட்டது.

இராணுவ தலைமையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட அவர்கள் இந்நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்தியிருந்ததோடு, தளபதியின் ஆரம்பயுரையினை ஆரம்பிப்பதற்கு முன்பாக தளபதியவர்கள் தொடர்பிலான காணொலியொன்றும் ஔிபரப்பட்டது.