Header

Sri Lanka Army

Defender of the Nation

12th June 2022 14:40:45 Hours

இராணுவ தளபதிய கண்டி தலதா மாளிகையை வழிப்பட்டு மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார்

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, அவரது பாரியாரும், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி ஜானகி லியனகே மற்றும் அவரது குடும்பத்தினருடன் சனிக்கிழமை (11) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார். இலங்கை இராணுவத்தின் 24 வது தளபதியாக பதவியேற்றதன் பின்னர் மலையகத்தின் புனித வழிபாட்டுத் தளத்திற்கு தளபதி முதல் விஜயத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயிலில், தளபதியவர்களுக்கு வரவேற்பளித்த விகாரையின் நிர்வாக தலைவர் (தியவடன நிலமே) திரு நிலங்க தெல பண்டார, மல்லிகைப் பூக்களை வழங்கி இராணுவ தளபதியை மத வழிபாடுகளுக்கான பிரதான அறைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் தளபதியவர்கள் மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களை பெற்றுகொண்டதன் பின்னர் ‘கிலான்பச’ வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதனையடுத்து அங்கு வருகை தந்திருந்த மகா சங்கத்தினருடன் ஆலோசணை மற்றும் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர், லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தியவதன நிலமே அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். சந்திப்பின் நிறைவில் இருவரும் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.

பின்னர், புதிதாக நியமனம் பெற்ற இராணுவ தளபதியவர்கள் அவரது குடும்பத்தார் சகிதமாக கண்டி மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் அவர்களை சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றுகொண்டார். இதன்போது புதிதாக நியமனம் பெற்ற தளபதியவர்களுக்கு நாட்டை பாதுகாப்பதற்கும் நாட்டிற்காக நல்ல பணிகள் பலவற்றை தொடர்வதற்கும் அவசியமான பலம் கிட்ட வேண்டுமெனவும் ஆசிர்வதித்தார்.

அதன் பின்னர் புதிய தளபதி அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டதை தொடர்ந்து அவருக்கு “அட்டபிரிகர” வழங்கினார். இதன்போது, லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேயின் நியமனம் குறித்து அதி வண. வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன மகாநாயக்க தேரர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், அனைத்து இலங்கையர்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு இராணுவத்தின் தற்போதைய மேம்பாட்டிற்கான பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

இந்த விஜயத்தின் போதான நிகழ்வுகளில், திருமதி ஜானகி லியனகே, அவரது குடும்ப உறுப்பினர்கள், இராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, 11வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கல்ப சஞ்சீவ, மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

அதனையடுத்து, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, நாட்டு மக்கள் உணவுப் பற்றாக்குறை சவால்களை எதிர்கொள்ளும் இவ்வேளையில் கைவிடப்பட்ட அனைத்து அரச காணிகளிலும் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கான முயற்சிகள் அனைத்தும் படையினரால் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.