Header

Sri Lanka Army

Defender of the Nation

08th June 2022 12:15:47 Hours

பாதுகாப்பு தலைமையக சிப்பாய்களுக்கான புதிய தங்குமிட கட்டிடம் திறந்து வைப்பு

ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் சேவையாற்றும் 740 சிப்பாய்களின் நீண்ட கால தேவையாக காணப்பட்ட தங்குமிட வசதிகளை நிவர்த்திசெய்யும் முகமாக, தலைமையகத்திற்கு அருகிலுள்ள தலங்கம வடக்கு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் இன்று (8) முற்பகல் படையினர் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மிக்க பொறியியல் சேவைப் படையணி, இலங்கை பொறியியல் படையணியின் ஆளணி வளத்தை கொண்டு நிர்மாணிக்கப்பட்ட மேற்படி 4 மாடிகளை கொண்ட கட்டிடத்தின் நிர்மாண பணிகளுக்கு கடற்படை மற்றும் விமானப்படையினரும் பங்களிப்புக்களை வழங்கியிருந்தனர். இக்கட்டிடமானது பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோரின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) கமால் குணரத்ன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

பிரதம அதிதிதிகளின் வருகையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் மங்கள விளக்கு ஏற்றும் நிகழ்வினை தொடர்ந்து நாடா வெட்டி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தலைமையகத்தின் சிப்பாய்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக காணப்படும் இக்கடடிடம் திறந்து வைக்கப்பட்ட பின்னர் அதற்குள் காணப்படுகின்ற வசதிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதி ஆகியோர் பார்வையிட்டதோடு அவர்களுக்கு அதிகாரிகளினால் இத்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இக் கட்டிட வளாகத்தில் நலன்புரி உணவகம், சேவை வனிதையர் பிரிவு விற்பனை நிலையம், மருத்துவ பரிசோதனை அறை மற்றும் ஏனைய மருத்துவ வசதிகள் காணப்படுவதோடு இக்கட்டிடத்தின் நிர்மாண பணிகள் பாதுகாப்பு தலைமையக செலவீனங்களின் கீழ் திறைசேரியின் ஆலோசனையுடன் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை கொண்டு மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்விற்கு வருகை தந்த பாதுகாப்புச் செயலாளருக்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதி ஆகியோரால் வரவேற்பளிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி, இராணுவ தொண்டர் படையணியின் தளபதி, விமானப்படையின் அதிகாரிகள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.