Header

Sri Lanka Army

Defender of the Nation

06th June 2022 14:51:16 Hours

கடற்படைத் தளபதியை இராணுவத் தளபதி மரியாதை நிமித்தம் சந்தித்தார்

24 வது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களை இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் திங்கட்கிழமை (6) அவரது அலுவலகத்தில் சந்தித்த போது அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இராணுவத் தளபதி கடற்படைத் தலைமையகத்தை வந்தடைந்த சில வினாடிகளின் பின்னர், கடற்படைப் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெரும அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன், இராணுவ மரபுகளுக்கு இணங்க பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

அடுத்து, கடற்படைத் தளபதி அன்பான கைகுலுக்கலுக்குப் பிறகு, கடற்படைத் தலைமை அதிகாரி உட்பட தனது முதன்மைப் அதிகாரிகளை அன்றைய பிரதம அதிதியான லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கு அறிமுகப்படுத்தி அவரை கடற்படைத் தளபதி அலுவலகத்திற்கு அழைத்தார்.

வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன புதிய இராணுவத் தளபதியுடனான கலந்துரையாடலின் போது, தேசிய பாதுகாப்பு, தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் பொதுவான விடயங்கள் தொடர்பாக இராணுவத்தின் எதிர்காலப் பணிகள் குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார். கடற்படைத் தளபதி தனது அலுவலகத்திற்கு வருகை தந்த புதிய இராணுவ தளபதிக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன், இராணுவத் தளபதிக்கு விசேட நினைவுச் சின்னத்தையும் வழங்கினார்.