Header

Sri Lanka Army

Defender of the Nation

31st May 2022 23:25:42 Hours

புதிய இராணுவ தளபதி காயமடைந்த போர் வீரர்களுடன் கலந்துரையாடினார்

24 வது இராணுவத் தளபதியாக ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், புதன்கிழமை (1) அத்திடிய 'மிஹிந்து செத் மெதுர' விடுதிக்கு தனது விஜயத்தை மேற்கொண்டார். போரில் காயமடைந்த போர் வீரர்களின் நல்வாழ்வைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவே குறித்த விஜயத்தினை அவர் மேற்கொண்டார்.

அங்கு விஜயத்தை மேற்கொண்ட அவர், தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் கை,கால்களை தியாகம் செய்த போர்வீரர்களுடன் சுதந்திரமாக கலந்துரையாடியதுடன் சிகிச்சை விடுதியையும் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் தனது பாரியாரான திருமதி ஜானகி ஜயரத்ன அவர்களுடன் இணைந்து படுக்கையில் இருக்கும் போர்வீரர்களுடன் கலந்துரையாடிதுடன் அவர்களின் நலனையும் விசாரித்தார் மற்றும் இந்த ஆரோக்கிய விடுதியில் நிர்வகிக்கப்படும் சிகிச்சை அம்சங்கள் மற்றும் குணப்படுத்தும் நடைமுறைகள் பற்றி கலந்துரையாடிய அவர், ஒவ்வொரு போர் வீரருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சிறப்புப் பரிசுப் பொதி வழங்கப்பட்டதன் பின்னர், புதிய தளபதி மருத்துவ ஊழியர்களிடம் கலந்துரையாடினார்.

அதனை தொடர்ந்து அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்த போர் வீரர்களை சந்தித்து அவர்களுக்கு பரிசுப் பொதிகளை வழங்கினார். விருந்துபசாரத்தின் போது, புதிய இராணுவத் தளபதி, ‘மிஹிந்து செத் மெதுர’ விடுதியின் தளபதி கேணல் பிரியந்த லியனகேவிடமிருந்து ‘மிஹிந்து செத் மெதுர’வின் வகிபாகம் தொடர்பாக கலந்துரையாடி தெரிந்து கொண்டார்.

அதேநேரம், லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே தனது சுருக்கமான உரையில், காயமடையந்த போர்வீரர்களுக்கு எதிர்காலத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிப்பதாக உறுதியளித்தார். மே 2009 க்கு முன்னர் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது அவர்களின் வீரம் மற்றும் வீரச் செயல்களை நினைவுகூர்ந்த லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், குறித்த போர்வீரர்களின் தியாகங்களின் விளைவாக நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட்டதாகக் கூறினார்.

மேலும் அந்த போர்வீரர்களால் தயாரிக்கப்பட்ட பல கைவினைப் பொருட்களையும் அவர் பார்வையிட்டதுடன் அவர்களின் வெவ்வேறு அழகியல் திறமைகள் மற்றும் திறன்களைப் பற்றி விசாரித்தார். லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் ‘மிஹிந்து செத் மெதுர’ தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க அதிதிகள் புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார். இராணுவத் தளபதியின் ‘மிஹிந்து செத் மெதுர’ விஜயத்தைப் பாராட்டி நினைவுச் சின்னமும் அவருக்கு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு, இலங்கை இராணுவத் தொண்டர் படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஸ்வர்ண பொத்தோட்ட, உபகரண மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் ஹிரோஷ் வணிகசேகர, நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர , நலன்புரி பணிப்பாளர் பிரிகேடியர் ரொஹான் ராஜபக்ஷ, புனர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் ஷிரோன் ஏக்கநாயக்க,‘மிஹிந்து சேத் மெதுர’ தளபதி கேணல் பிரியந்த லியனகே, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.