31st May 2022 20:25:42 Hours
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் புதிதாக நியமனம் பெற்ற இராணுவ தளபதியான மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு 1 ஜூன் 2022 முதல் அமுலுக்கு வரும் வகையில் லெப்டின்ட் ஜெனரலாக நிலை உயர்வு வழங்கப்படவுள்ளது.
ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் புதிய பதவி நிலை பிரதானியாக நியமனம் பெற்றுக்கொண்டுள்ளதையடுத்து லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் 24 வது இராணுவ தளபதியாக நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.