Header

Sri Lanka Army

Defender of the Nation

30th May 2022 19:57:40 Hours

எஸ்எல்டி மற்றும் எஸ்எம்ஐபி உடன் இணைந்து ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவம் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான மொபிடெல் இணைப்பு அறிமுகம்

இராணுவத் தளபதியாகவிருந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது பதவியை இராஜினாமம் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இராணுவத்தின் 'முன்னநகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020 - 2025' இற்கு அமைவாக இலங்கை டெலிகொம் மொபிடல் நிறுவனதத்துடன் இணைந்த மற்றொரு குறிப்பிடத்தக்க நலன்புரி திட்டமான விஷேட மொபிடல் இணைப்பை இன்று (30) அறிமுகப்படுத்தினார். அதற்கு இணையாக இராணுவ தளபதியின் அலுவலகத்திற்கு அழைப்பிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளின் குடும்பங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு பல்கலைக்கழக கல்விக்கான புலமைப் பரிசில் தொகைகள் வழங்கி வைக்கப்பட்டன.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதியின் எண்ணக்கருவுக்கமைய இத்திட்டம் டெலிகொம் மொபிடல் மற்றும் அரச ஈட்டு முதலீட்டு வங்கி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இராணுவ தலைமையகத்தின் நலன்புரி பணிப்பகத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் டெலிகொம் மொபிடல் நிறுவனமாகது “விரு அபிமான மொபிடெல் தொலைத்தொடர்புத் இணைப்பை” இராணுவத்தினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வசதிகளை வழங்கும் வகையில் மானிய விலையில் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக , பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால், கெமுனு ஹேவா படையணியின் கெப்டன் யூஜிஏஎஸ் சமரநாயக்கவின் மனைவி மற்றும் சார்ஜன்ட் பிஎம்எஸ் பண்டாரவின் மனைவிற்கு வழங்கி வைக்கப்பட்டது. மேற்படி இருவரும் பயங்கரவாத விடுதலை புலிகள் அமைப்புடன் நடைபெற்ற போராட்டத்தின் போது மேற்கொண்ட அர்பணிப்புக்களுக்காக பரம வீர விபூஷண (PWV) பதக்கம் வென்றவர்கள்.

டெலிகொம் மொபிடல் நிறுவனம் இராணுவத்தின் ஈடு இணையற்ற பாத்திரங்களை கௌரவிக்கும் விதமாக 'பரம வீர விபூஷண' பதக்கம் பெற்றுள்ள முப்படை வீரர்களுக்காக இப்புதிய வசதியை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இரண்டாவது கட்டமாக டெலிகொம் மொபிடல், அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி மற்றும் இலங்கை இராணுவ நலன்புரி பணிப்பகம் ஆகியன இணைந்து 2021 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் உயர்கல்விக்காக பல்கலைக்கழக தகுதி பெற்ற 13 இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு புலமை பரிசில் தொகைகள் வழங்கப்பட்டன.

அதன்படி, இத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிள்ளையும் தலா ரூ. 120,000/= பெறுமதியான நிதி உதவியினை ஒரு வருட காலத்திற்கு பெறுவர்.

இத்திட்டத்தின் அடையாள அம்சமாக பாதுகாப்பு இணைப்பாளரான மேஜர் ஜெனரல் லால் விஜேதுங்கவின் மகள் மற்றும் இயந்திரவியற் காலாட் படையணியின் பணிநிலை சார்ஜணின் மகன் ஆகியோர் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களிடமிருந்து பண காசோலையை பெற்றுகொண்டனர்.

அதன்படி, மேற்படி 13 மாணவர்களுக்கும் “விரு அபிமான மொபிடெல் தொலைத்தொடர்பு இணைப்பு” மற்றும் டெலிகொம் மொபிடல் நிறுவனத்தினால் அண்ட்ரோய்ட் கையடக்கத் தொலைபேசியும் வழங்கி வைக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக ஒவ்வொரு பிள்ளைக்கும் அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் அனுசரணையுடன் பரிசுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ரொஹான் ராஜபக்ஷ, அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் பணிப்பாளர் திரு சுஜித் ஹெட்டியாராச்சி, அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் சந்தைப்படுத்தல் தலைவர் திரு நுவன் திலகவர்தன, டெலிகொம் மொபிடல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சந்திக விதாரண மற்றும் டெலிகொம் மொபிடல் சந்தைப்படுத்தல் மற்றும் அபிவிருத்தி அதிகாரி ஷஷிகா செனரத் ஆகியோரும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.