29th May 2022 18:02:11 Hours
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்கு பங்களிப்பு வழங்கிய படைவீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களை நினைகூறும் சர்வதேச தினமான (மே 29) அன்று கடந்த வருடத்தில் உயிர்நீத்த 135 பேர் உள்ளடங்களாக 1948 ஆம் ஆண்டு முதல் ஐ.நா. கொடியின் கீழ் பணியாற்றிய 4,200 பேருக்குமான நினைவுக்கூறல் நிகழ்வு " ஒற்றுமையின் சக்தியே மக்கள் சமாதானத்தின் முன்னேற்றம்.." என்ற தொனிப்பொருளின் கீழ் அனுட்டிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளரும், ஐ.நா பொதுச்செயலாளரின் இலங்கைக்கான பிரதிநிதியுமான திருமதி ஹனா சிங்கர்-ஹம்டி அவர்கள் தனது டுவிட்டர் பகத்தில் அமைதிகாக்கும் பணிகளின் போது உயிர் நீத்த 11 இலங்கை வீரர்கள் உட்பட 4,200 போர் வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக பதிவொன்றை இட்டுள்ளார். அவரது பதிவு கீழ்வருமாறு,
“சர்வதேச அமைதிகாப்பாளர்கள் தினத்தில், அமைதிக்காக உயிர் தியாகம் செய்த 11 இலங்கையர்கள் உட்பட 4,200 போர்வீர வீராங்கனைகளுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். சமூகங்கள் மோதலில் இருந்து விலகி, மிகவும் அமைதியான மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல உதவும் அமைதிக் காக்கும் படைவீரர்களின் அர்ப்பணிப்பை நாங்கள் பெரிதும் போற்றுகிறோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், மாலியில் பணியாற்றிய 2 இலங்கை இராணுவ அமைதி காக்கும் படையினர் உயிர் நீத்துள்ளனர். அவர்களில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் டபிள்யூஎச்டீ ஜயவிக்கிரம மற்றும் இயந்திரவியற் காலாட் படையணியின் சார்ஜென்ட் எஸ்எஸ் விஜேகுமார ஆகியோர் அடங்குவர்.
போர் நிறுத்த உடன்படிக்கையின் அடிப்படையில் இஸ்ரேல் மற்றும் அரேபிய கூட்டு நாடுகளுக்கிடையிலான போர் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நிறுவப்பட்ட (UNTSO) அமைப்பின் கீழ் ஐநா அமைதி காக்கும் பணிகள் 1948 ஆம் ஆண்டு மே 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது நடைபெற்ற பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் ஐநாவின் சிறிய எண்ணிக்கையிலான படையினரை மத்தியகிழக்கு நாடுகளுக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.