Header

Sri Lanka Army

Defender of the Nation

26th May 2022 11:00:12 Hours

கொழும்பிலிருந்து வெளியேறும் பிராந்திய செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதி இராணுவத் தளபதியை சந்திப்பு

கொழும்பில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க (ICRC) பிராந்திய அலுவலகத்தின் ஆயுத மற்றும் பாதுகாப்புப் படைப் பிரதிநிதி பதவியிலிருந்து ஓய்வு பெறவிருக்கும் பிரிகேடியர் (ஓய்வு) ஜாக் லெமே தனதுக்கு பதிலாக கடமைகளை பொறுப்பேற்கவிருக்கும் புதிய பிரதிநிதியுடன் புதன்கிழமை (25) பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது மேற்படி பிரதிநிதியின் பதவிக்காலத்தில் இலங்கை இராணுவத்திற்கு வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு ஜெனரல் ஷவேந்திர சில்வா நன்றி தெரிவித்தார்.

அதேநேரம் புரிந்துணர்வுடன் பணியாற்றிய மேற்படி பிரதிநிதி இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கும் ஜெனரல் ஷவேந்திர சில்வா நன்றி தெரிவித்தார்.

அதனையடுத்து ஓய்வுபெறவிருக்கும் செஞ்சிலுவை சங்க பிரதிநிதிதிக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கி வைத்த தளபதியவர்கள் அவரது அடுத்தக்கட்ட பணிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

சந்திப்பின் நிறைவம்சமாக பிரிகேடியர் (ஓய்வு) ஜாக் லெமே மற்றும் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகிய இருவரும் நினைவுச் சின்னங்களை பரிமாற்றிக்கொண்டனர். மேற்படி பிரதிநிதிக்கு பின்னர் பதவியேற்கவிருக்கும் மேஜர் (ஓய்வு) ஆல்பர்ட் ஸ்கோன்வெல்டும் மேற்படி மரியாதை நிமித்தமான சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.