Header

Sri Lanka Army

Defender of the Nation

24th May 2022 12:13:19 Hours

வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு படையினர் ஒத்துழைப்பு

58 வது படைப்பிவினருடன் இணைந்து 143 வது பிரிகேடினரால் இன்று (24) காலை வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளத்திலுள்ள புனித அன்ட்ரூஸ் மத்திய கல்லூரியின் பரீட்சை நிலையமொன்றிலிருந்த 156 மாணவர்களை வெளியேற்றி அவர்களுக்கு பரீட்சை எழுதுவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் வௌ்ள நீர் இரண்டு அடிகளுக்கு மேல் உயர்வடைந்தமையினால் முதலில் அனைத்து மேசைகளையும் நாற்காலிகளையும் விரைவாக மூன்று மாடி கட்டிடத்தில் அகற்றிய இராணுவ வீரர்கள், 156 பரீட்சார்த்திகளையும் மூன்று இராணுவ பஸ்களின் உதவியுடன் பாடசாலையின் மற்றுமொரு மாடிக்கட்டிடத்திற்கு மாற்றப்பட்டனர்.

பின்னர் அதிபர் மற்றும் பரீட்சை கண்காணிப்பாளர்களுடன் கலந்தாலோசித்ததை தொடர்ந்து 143 பிரிகேட் தளபதி பிரிகேடியர் பௌமி கிச்சிலன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் 58 வது படைப் பிரிவின் உதவியுடன் 143 வது பிரிகேட் சிப்பாய்களால் தளபாடங்கள் அனைத்தும் மேல் மாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டு குறுகிய நேரத்தில் பரீட்சை நிலையம் தயார் செய்யப்பட்டது.