Header

Sri Lanka Army

Defender of the Nation

24th May 2022 09:56:25 Hours

வாழ்த்துகளுக்கு மத்தியில் இராணுவத்தின் மற்றுமொரு குழு மாலிக்கு புறப்படுகிறது

ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்காக பயிற்விக்கப்பட்ட 243 பேர் அடங்கிய குழுவின் முதற்கட்ட குழுவாக 100 வீரர்கள் (23) மாலை மாலிக்கு புறப்பட்டுச் சென்றனர். படிப்படியாக ஏனைய குழுக்களும் புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மாலிக்கு அமைதிகாக்கும் பணிக்காக செல்லவிருக்கும் மேற்படி குழுவினருக்கு ஊக்கமளிக்கும் வகையில், புறப்படவுள்ள முதற்கட்ட குழுவினருடன் எண்ணங்களை பகிர்ந்துகொண்ட பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அதனைடுத்து மாலிக்கு செல்லும் நான்காம் கட்ட குழுவின் கட்டளை அதிகாரி கேணல் சந்தன ஜயமஹாவுடன் எண்ணங்களை பகிர்ந்துகொண்ட தளபதியவர்கள், நாட்டின் தற்போதைய நிலையில் அவர்களின் பணி எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் வலியுறுத்தினார்.

"இராணுவத்தின் 12 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உங்களது ஐநா அமைதிகாக்கும் பணியானது ஐநா அமைதிகாக்கும் பணிகளின் போதான அங்கீகாரத்தை மேலும் உறுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்றும், தாய் நாட்டின் கௌரவத்தை பாதுகாக்கும் அதேவேளை உங்களது பணிகளில் எவரும் தலையீடு செய்ய இடமளிக்காத வகையில் ஒழுக்க நெறிகளையும் பேணி பொறுப்புடன் பணியாற்றுவதே உங்களது பிரதான பணியாகும் எனவும் தளபதியவர்கள் அறிவுறுத்தினார்.

அதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதுகாப்பு இதேவேளை, ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், “மாலியில் உள்ள எமது இலங்கைப் படையினர், கஷ்டங்களை பொருட்படுத்தாமல் கடினமான பணியைச் செய்கிறார்கள். இலங்கை படையினரின் தொழில்முறை தரத்தில் ஈர்க்கப்பட்ட ஐ.நா பிராந்திய தளபதிகள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதேநேரம் தேசத்தின் பாதுகாவலர்களாக விளங்கும் இலங்கை இராணுவம் நாட்டு மக்களுக்கான பாதுகாப்பை வழங்குவதோடு, நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் மிகவும் அவசியமாக காணப்படுகின்ற அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பணிகளை மேற்கொள்ளும் பணிகளையும் இராணுவம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. அதனால் இந்த மண்ணையும் மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து எக்காரணம் கொண்டும் நாங்கள் விலக மாட்டோம் என உறுதியளித்த தளபதியவர்கள், மே 9ஆம் திகதி நாட்டிற்குள் ஏற்பட்ட அமைதியின்மையை பொலிஸாருடன் இணைந்து 24 மணித்தியாலங்களுக்குள் கட்டுப்படுத்தும முயற்சியில் இராணுவம் வெற்றி கண்டதோடு, அதற்காக அளப்பரிய ஒத்துழைப்புக்களை வழங்கிய பொது மக்கள் தொடர்ச்சியாக ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதனையடுத்து மேற்கு ஆபிரிக்காவில் உள்ள மாலிக்கு விமானத்தில் புறப்படவிருந்த சகலருக்கும் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இரத்தினபுரியில் அமைந்துள்ள கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் மாலி செல்லும் குழுவினரால் தளபதிக்கு 04 மே 2022 மரியாதை செலுத்தப்பட்டதோடு, மேற்படி குழுவினர் குக்குலேகங்க மற்றும் மாதுருஓயாவில் உள்ள ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்கான பயிற்சிகளை சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்திருந்தனர். மேற்படி குழுவில் இலங்கை இராணுவ கவசப் படையணி, இலங்கை பொறியியல் படையணி, இலங்கை இராணுவ சமிக்ஞை படையணி, இயந்திரவியற் காலாட் படையணி, பொறியியல் சேவை படையணி, இலங்கை இராணுவ சேவை படையணி, இலங்கை இராணுவ போர் கருவிகள் படையணி, இலங்கை இராணுவ மின்சார பொறிமுயை படையணி, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி, இலங்கை இராணுவ மருத்துவ படையணி மற்றும் இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணியினர் ஆகிய படையணிகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அங்கம் வகிக்கின்றனர்.

மேற்படி குழுவினரை வழியனுப்பி வைப்பதற்காக விமான நிலையத்தில் நடைபெற் நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவ வழங்கல் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரகோண்,பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட, கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் தெற்கு பல்கலைக்கழக வேந்தர் மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்க, ஆளனி நிர்வாக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் உதய குமார, நடவடிக்கை பணிப்பக பணிப்பாளரும் வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பாளருமான பிரிகேடியர் சாந்த ரணவீர, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினரும் கலந்துகொண்டிருந்தனர்.