Header

Sri Lanka Army

Defenders of the Nation

23rd May 2022 11:00:56 Hours

கூரகலவில் இடம்பெற்ற அரச வெசாக் தின இறுதி நிகழ்வில் இராணுவத் தளபதி பிரதம அதிதியாக பங்கேற்பு

இராணுவத்தினரால் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட கூரகல ராஜமஹா விஹாரை என அழைக்கப்படும் கூரகல விகாரை வளாகத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட ஒரு வார கால வெசாக் தின நிகழ்வின் இறுதி நிகழ்வு (மே 21-22)ம் திகதிகளில் புத்த பிக்குகளின் முன்னிலையில் நடைபெற்றதுடன் இறுதிக்கட்ட நிகழ்வின் பிரதம அதிதியாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கலந்துகொண்டார். இறுதிக்கட்ட நிகழ்வின் போது புத்த துறவிகளுக்கு அன்னதானம் வழங்குதல், தூபியின் ஊர்வலம் மற்றும் மத சடங்குகள், அஷ்டபான பூஜை மற்றும் கிலான்பசா பூஜை மற்றும் கலாச்சார நிகழ்வுடன் கூடிய இறுதி பக்தி பாடல் (பக்தி கீதை) ஆகிய நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றன.

அன்றைய பிரதம அதிதி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கோஷங்களுக்கு மத்தியில் புனித 'பெண்வீதிம' சடங்கில் இணைந்த பௌத்த தளமான முழு விகாரை வளாகத்தையும் மகாசங்க சமூகத்தின் பழங்கால மரபுகளின்படி சுமார் 200 பௌத்த பிக்குகள் ஒன்றுகூடி 'சாசன' வில் வைத்து வழிபட்டனர். அதற்கு முன்னதாக, பிரதம விருந்தினர், நினைவுச் சின்னத்தில் உள்ள ‘சுகந்த குடியா’விற்கு காணிக்கைகளை வழங்கினார். இதேபோன்று, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஸ்வர்ண போதோட்ட, ஆளனி நிர்வாக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் உத்ய குமார மற்றும் சில மூத்த அதிகாரிகள் அதே நேரத்தில் இணைந்து ‘எசிடிசி மஹா சேயா’ (டகோபா) க்கு காணிக்கைகளை வழங்கினர்.

2300 ஆண்டுகளுக்கும் பழமையாக கருதப்படும் சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கூரகல விகரையானது, ஒரு வருடத்திற்கு குறைவான காலப்பகுதியில் மூன்று முறை ஆசீர்வாதிக்கப்பட்டு ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியதுடன் இந்த வெசாக் தினத்துடன் அரச வெசாக் நிகழ்வு இடம்பெற்றது.

இப்பணிக்காக வண. வென்வதுர கும்புரே தம்மரதன தேரர் தனது அர்ப்பணிப்பு சேவையினை செய்துள்ளதுடன் பக்தியுள்ள பௌத்தர்கள் , சிவில் பாதுகாப்பு சேவை பணியாளர்கள் மற்றும் இராணுவத்தினர் தங்களது முழு மையான ஒத்துழைப்பபை வழங்கியுள்ளனர்.

2021 இல் அதன் புனரமைப்பு பணிகள் தீவிரமாக ஆரம்பித்த பொறியியலாளர் சேவைப் படையணியின் இராணுவ சிப்பாய்கள், தற்போதைய புத்த மதகுருவிடம் கலந்தாலோசித்து, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், தொல்பொருள் மதிப்புமிக்க இந்த பௌத்த மதத்தளத்தை புனரமைப்பதில் தீவிரமாக முன்னெடுத்தனர்.

புதிதாக புனரமைக்கப்பட்ட தூபி 'கிலன்பச' மற்றும் வழக்கமான 'தேவாவா' (தினசரி சடங்கு) மற்றும் 'அஷ்டபனா' தங்க கலசத்திற்கு காணிக்கைகள் செலுத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகள் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் , சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய பக்தர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றதுடன் வருகை தந்த பல பக்தர்கள் அந்த நிகழ்வுகளுக்குப் பிறகு இறுதிக்கட்ட விழாக்களில் கலந்துகொண்ட மகா சங்க உறுப்பினர்களுக்கு விருந்துபசாரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் தூபி திறந்துவைத்த பின்னர், பௌத்தத்தின் பாரம்பரியம் மற்றும் காலத்தை எடுத்துக்காட்டும் வண்ணமயமான 'பக்தி கீ' (பக்தி கீதை) பாடல் மற்றும் கலாச்சாரப் நிகழ்வு இடம்பெற்றது.

அங்கு வெசாக் கூடு அலங்கரிக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இராணுவத் தளபதி பரிசுகளை வழங்கினார். முதலாம் இடத்தை இலங்கை பீரங்கி படையணியின் படையினரும், 2ஆம் இடத்தை இலங்கை பொறியியலாளர் படையணியின் படையினரும், 3ஆம் இடத்தை இலங்கை கவச வாகண படையணியின் படையினரும் பெற்றுக்கொண்டனர்.

முதல் கட்டமாக வெசாக் தினத்தன்று (15), புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிங்க சிலைக்கு செல்லும் நுழைவு படிக்கட்டு , சமாதி புத்தர் சிலை மற்றும் புத்த சாசனத்தில் உள்ள முழு வளாகம் ஆகியவற்றை திறந்து வைக்க ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு தலைமை பிக்கு அழைப்பு விடுத்தார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, நூற்றுக்கணக்கான பாரம்பரிய மேளக்காரர்கள் சம்பிரதாய முழக்கம் எழுப்பியதுடன் மற்றும் மகா சங்க உறுப்பினர்கள் 'செத்பிரித்' ஓதத் தொடங்கியதனையடுத்து , பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, நன்கொடையாளர்களுடன் இணைந்து கூரகல 'அசிடிசி ஷைகமுனி மஹாசேயா' என்ற இடத்தில் உள்ள தங்க சிகரத்தினை திறந்து வைத்தார்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இலங்கையின் பௌத்தர்களின் புனித விகாரையை சுற்றி அமைக்கப்பட்ட புதிய பிரசங்க மண்டபமான 'எசிடிசி ஷக்ய சுகத தம்சப மண்டபய' மற்றும் போதிகராய (பாராபெட் சுவர்) ஆகியவற்றை பிரித் பாராயணங்களின் மத்தியில் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். இராணுவ பௌத்த சம்மேளனம், நெத் எப்எம் மற்றும் ஏனைய பக்தர்களால் வழங்கப்பட்ட நிதியில் நிர்மாணிக்கப்பட்ட நினைவு மண்டபத்தை ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுடன் ஏனைய நன்கொடையாளர்களும் இணைந்து திறந்து வைத்தனர்.

இந்த வளாகத்தில் உள்ள கட்டுமானங்களின் மற்ற நிகழ்வுகளைப் போலவே, இலங்கை இராணுவத்தின் மனிதவளம் மற்றும் பொறியியல் நிபுணத்துவம் பிரத்தியேக கட்டிடக்கலையின் நினைவுச்சின்னங்களின் இந்த கண்கவர் கட்டிடத்தை அமைக்க உதவியது. ஏறக்குறைய அதே நேரத்தில் துறவிகளின் ஓய்வு விடுதி மற்றும் இருப்பிட நிர்வாகத்தின் நலனுக்காக 4-அடுக்கு குடியிருப்புகள் (சங்கவாசய), நிர்வாகப் பிரிவு மற்றும் பிக்குகளுக்கான அன்னதான மண்டபம் (டான ஷலவா) ஆகியவை ஒரே நாளில் திறக்கப்பட்டன.

சில வருடங்களுக்கு முன்னர் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவினால் இத்திட்டத்தை ஆரம்பித்து வைக்க எடுக்கப்பட முயற்சிகள் மற்றும் அவரது இடைவிடாத ஒத்துழைப்பு காரணமாக ஒரு வருடத்திற்கும் குறைவான காலப்பகுதியில் அதனை நனவாக்க முடிந்ததுடன் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவ சிப்பாய்களினதும் சிறந்த ஒத்துழைப்பும் இத்திட்டத்தின் வெற்றிக்கு உறுதுணையாக காணப்பட்டது. மேலும் சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் பௌத்த குழுக்களின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றது என வண.வத்துரகுபுரே தம்மரதன தேரர் நன்றியுடன் தெரிவித்துக்கொண்டதுடன் சிப்பாய்களின் அர்ப்பணிப்புப் பணிகளுக்கு அவர் மிகுந்த நன்றியைத் தெரிவித்தார், மேலும் கவனிக்கப்படாமல் இருந்த அந்த இடத்தினை மீட்டெடுக்க கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகியதையும் இதன் போது சுட்டிக்காட்டினார்.