20th May 2022 11:38:13 Hours
பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் 13 வது போர் வீரர் வெற்றி தினத்தை முன்னிட்டு இன்று காலை (19) தனது ஸ்ரீ ஜயவர்தனபுர அலுவலகத்தில் பிரிகேடியர் நிலையில் உள்ள 08 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு மேஜர் ஜெனரல் பதவி உயர்வுக்கான புதிய சின்னங்களை அணிவித்தார்.
புதிதாக பதவி உயர்வு பெற்ற குழுவில் இலங்கை பீரங்கி படையணியை சேர்ந்த 55 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன, இலங்கை சமிக்ஞைப் படையணியை சேர்ந்த கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுகத் ரத்நாயக்க, இலங்கை சிங்கப் பரடயணியை சேர்ந்த 68 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரொஹான் பொன்னம்பெரும, இலங்கை பொறியாளர் படையணியை சேர்ந்த 12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால, கஜபா படையணியை சேரந்த 24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம , இலங்கை சிங்க படையணியை சேர்ந்த தற்போது பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றி வரும் மேஜர் ஜெனரல் கனிஷ்க ஹெய்யன்துடுவ. இயந்திரவியல் காலாட்படை படையணியை சேர்ந்த 52 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உதய ஹேரத், மற்றும் கஜபா படையணியை சேர்ந்த இலங்கை தொண்டர் படைத் தலைமையகத்தின் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் ஷென் குணவர்தன ஆகியோர் இவ்வாறு அடுத்த தரத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், அவர்களின் புதிய மேஜர் ஜெனரல் சின்னத்தை தனித்தனியாகப் அணிவித்ததுடன், ஒவ்வொருவருக்கும் ஒரே நேரத்தில் அதிகாரத்தின் அடையாள சின்னமாக வாளை கையளித்தார்.
இதனை தொடர்ந்து ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் புதிய பதவி உயர்வு பெற்றவர்களுக்கு வழங்கிய ஆலோசனையின் போது இந்த மதிப்புமிக்க இரண்டு நட்சத்திர தரத்திற்கு உயர்வு என்பது அவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த செயல்திறன் ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும் என்று கூறினார்.
"இந்த தரமுயர்வானது உங்கள் பணிமூப்பு அல்லது பாடநெறி சிறந்த தரம் என்பதை மற்றும் கருத்திற்கொள்ளாமல், மே 2009 க்கு முன்னர் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான உங்கள் அர்ப்பணிப்பைக் கருத்தில் கொண்டு, தளபதிகள், பயிற்றுனர்கள், பணிப்பாளர்கள் , பதவி நிலை கடமைப் பாத்திரங்களையும் கருத்திற்கொண்டு வழங்கப்பட்டுள்ளது.இந்த 'மேஜர் ஜெனரல்' தரம், தொழில் வாழ்க்கையில் அங்கீகாரத்தின் மிக உயர்ந்த நிலையின் ஒன்றாக இருப்பதால், திறமையானவர்கள் மட்டுமே இந்த தரத்தை அடைய முடியும் என்பதால், அதன் கௌரவம், அங்கீகாரம் மற்றும் அதிகாரத்திற்கு ஏற்றவாறு நன்கு பராமரிக்கப்பட வேண்டும் என ”ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களிடம் கூறினார்.
அந்த புதிய ஜெனரல்கள் , அடுத்த தரவரிசைக்கு பதவி உயர்வு பெறுவதற்கு தேவையான பணியை தொடர வழங்கிய ஆலோசனை மற்றும் சிந்தனைக்காகவும் நன்றி தெரிவித்தனர்.