19th May 2022 17:06:14 Hours
இலங்கை இராணுவ எகடமியில் பாடநெறி அதிகாரியாக இருந்த பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் , 13வது போர் வீரர் வெற்றி தினத்தை முன்னிட்டு இன்று காலை (19) தனது அலுவலகத்தில் பிரிகேடியர் நிலை பதவிக்கு உயர்த்தப்பட்ட 7 சிரேஷ்ட கேணல்களுக்கு புதிய சின்னங்களை அணிவித்தார்.
இலங்கை இராணுவ எகடமியில் பாடநெறி 37 இல் உள்வாங்கப்பட்ட குறித்த 7 புதிய பிரிகேடியர்களும் முப்படைகளின் தளபதியும் அதிமேதகு ஜனாதிபதியவர்களின் அனுமதியுடன் பிரிகேடியர் நிலை தரத்திற்கு உயர்த்தப்பட்டனர். தியத்தலாவை இலங்கை இராணுவக் கல்லூரியில் பாடநெறி 37 இல் கெடட் அதிகாரிகளாக பயிற்சி பெற்றவேளை அவர்களின் பாடநெறி அதிகாரியாக இருந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களிடம் இருந்து புதிய பிரிகேடியருக்கான சின்னத்தை பெற்றுக் கொள்ளும் பாக்கியம் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது.
புதிதாக பதவி உயர்வு பெற்ற குழுவில் இலங்கை சிங்க படையணியை சேர்ந்த 213 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜகத் ஆரியதிலக, இலங்கை பீரங்கி படையணியை சேரந்த 541 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் தசந்த முனசிங்க,கெமுனு ஹேவா படையணியை சேரந்த 144 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விந்தன கொடித்துவக்கு, விஜயபாகு காலாட்படை படையணியை சேர்ந்த 143 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பௌமி கிச்சிலன்,கொமாண்டோ படையணியை சேர்ந்த கொமாண்டோ படையணி தலைமையகத்தின் நிலையத் தளபதி பிரிகேடியர் கமல் தர்மவர்தன,இலங்கை பொறியாளர் படையணியை சேர்ந்த 653 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நாமல் சேரசிங்க, மற்றும் கஜபா படையணியை சேர்ந்த கஜபா படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் ஷிரந்த மில்லகல ஆகியோர் அடங்குவர்.
தியத்தலாவையில் இவர்களின் முன்னாள் பாடநெறி அதிகாரியாக இருந்த இராணுவத் தளபதி அவர்கள் ஒவ்வொருவருக்கும் புதிய சின்னத்தை வழங்கியதுடன் சில காலத்திற்கு முன்பு தனது மாணவர் அதிகாரிகளாக இருந்த அந்த புதிய பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இராணுவத் தளபதி அவர்களுடனான சந்திப்பின் போது தகுதி பெற்ற அதிகாரிகளுக்கு அத்தகைய பதவி உயர்வுகளின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டியதுடன் அவர்கள் அனைவருக்கும் சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
"புதிய பதவி உயர்வு என்பது உங்களின் புதிய கடமைப் பணிகளுக்கு ஏற்ற பொறுப்புகளின் அளவைக் கருத்தில் கொண்டு, நீங்கள் உற்சாகத்துடன் செயல்பட உதவும் ஒரு உந்துசக்தியாகும்.உங்களின் கடினமாக முயற்சியின் காரணமாக கிடைக்கப் பெற்ற இந்த பதவி உயர்வு என்பது சிரேஷ்ட அதிகாரிகளால் உங்கள் திறன் நன்கு அங்கீகரிக்கப்பட்டு, முறையாகக் கருதப்பட்டுள்ளது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்" என்று இராணுவத் தளபதி கூறினார்.
இந்த உரையாடலின் போது இராணுவத் தளபதி இலங்கை இராணுவ கல்லூரியில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை நினைவு கூரியதுடன் அந்த நேரத்தில் குறைந்த வளங்கள் மற்றும் வசதிகளுடன் பயிற்சி பிரிவுகள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டன என்பதையும் விளக்கினார். “நீங்கள் அனைவரும் வெற்றிகரமாக பயிற்சியை முடித்த பிறகு, இந்த தகுதியான பதவிக்கு தகுதிபெற உங்கள் வாழ்க்கையில் நீண்ட தூரம் வந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.இலங்கை இராணுவ கல்லூரியில் பெற்ற பயிற்சியானது எதிர்காலத்தில் நீங்கள் ஓய்வு பெற்ற பின்னரும் உங்கள் வாழ்க்கையையும் குணத்தையும் மேலும் மேம்படுத்த உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் மேலும் தெரிவித்தார்.