Header

Sri Lanka Army

Defender of the Nation

15th May 2022 13:37:22 Hours

சிறப்பான ஆசிர்வாதங்கள் சகல பொருளாதார தடைகளையும் கடக்க உதவட்டும் – கூரகலவில் இராணுவ தளபதி

சப்ரகமுவ மாகாணத்தில் 2300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று பாரம்பரியத்தை கொண்ட பழமையான தொல்லியல் அம்சங்களில் ஒன்றாக விளங்கும் கூரகல ரஜமஹா விகாரை புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது. வண. வத்திரகும்புரே தம்மரதன தேரரின் அர்ப்பணிப்பு, பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் வெகுவான அர்ப்பணிப்பின் காரணமாக ஒரு வருடத்திற்கும் குறைவான காலப்பகுதிக்குள் விகாரையின் நிர்மாண பணிகள் நிறைவு செய்யப்பட்டன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் பாரம்பரியத்தை கொண்ட தொல்பொருள் தளமான இந்த பௌத்த மத தளத்தில் 2022 ஆம் ஆண்டின் தேசிய வெசாக் தின அனுட்டிப்பு நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றன. இந்நிகழ்வில் பெருமளவிலான பக்தர்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, அரச அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் நன்கொடையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பௌத்த நன்கொடையாளர்களான திருமதி திஸ்னா வணிகசேகர மற்றும் திரு சந்திரசேன விக்கிரமரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஆரம்ப அச்சமாக மேற்படி வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட் புத்தர் சிலை, சிங்க சிலை, நுழைவு படிக்கட்கள் ஆகியவற்றை பூமாலையால் ஆன நாடாவை வெட்டி திறந்து வைக்குமாறு ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு விகாரையின் பிரதம பிக்குவினால் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஊடகங்களுக்குப் பதிலளிக்கையில்

இப்பணிகளை ஒரு வருடத்தில் பூர்த்தி செய்வதற்கு அர்பணிப்பு நல்கிய வண. வத்துரகும்புரே தம்ரத்ன தேரர் அவர்களுக்கும், இராணுவம் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று இதுவரை 200க்கும் மேற்பட்ட விகாரைகள், தேவாலயங்கள், இந்து ஆலயங்கள், இஸ்லாமிய பள்ளி வாசல்கள் நிர்மாண பணிகளுக்கான உதவிகளை வழங்கியுள்ளதோடு, இயலாதது ஒன்றுமில்லை என்ற எண்ணகருவை அடிப்படையாக கொண்டு செயற்படும் இராணுவத்தின் ஆளணி வளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை அடிப்படையாக கொண்டு நாட்டை பாதுகாப்பும் படையினரால் எந்த பணியையும் சிறப்பாக செய்ய முடியுமென காண்பிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு திட்டமாக மேற்படி பணியை குறிப்பிட முடியுமெனவும் தெரிவித்தார். அதேநேரம் மேற்படி சிறப்பான பணியினால் கிடைக்கப்பெரும் ஆசிர்வாதங்கள் பொருளாதார நெருக்கடிகளால் பல்வேறு தடைகளையும் சிரமங்களையும் எதிர்கொள்ளும் இலங்கையர்களுக்கு நிவாரணமாக அமையுமெனவும் தெரிவித்தார். மேலும் துரதிர்ஷ்டவசமாக அண்மைய காலங்களில் நடைபெற்ற மோதல்களை 24 மணித்தியாலங்களில் வழமைக்கு திருப்ப படையினரால் முடிந்தது. எனவே சிறப்பான ஆசிர்வாதங்கள் நாட்டில் அமைதியையும் செழிப்பையும் உண்டாக்க படையினருக்கு வலுவை வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் அதனால் எதிர்காலத்தில் சர்வதேசத்தின் முன்பாக நாம் சகலரும் ஒற்றுமையான ஐக்கிய தேசத்தின் மக்களாக தலை நிமிந்து நிற்க முடியும் எனவும் தெரிவித்தார்.

புதுப்பிக்கப்பட்ட அம்சங்கள் மற்றும் திறப்பு விழா நிகழ்வின் முக்கிய அம்சங்கள் அடங்கிய புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளன.