Header

Sri Lanka Army

Defender of the Nation

08th May 2022 15:19:12 Hours

காங்கேசன்துறை வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ விகாரை தாதுகோபுரத்தில் சம்பிரதாய ரீதியில் புனித தாது பிரதிஷ்டை

தேவநம்பியதிஸ்ஸ மன்னன் காலத்தில் நிறுவப்பட்ட முக்கிய பௌத்த விகாரைகளின் ஒன்றாகக் கருதப்படும் யாழ் குடாநாட்டில் அமைந்துள்ள காங்கேசன்துறை பிரதேசத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ ரஜமஹா விகாரைக்கு புதிய அத்தியாயம் ஒன்று சேர்க்கப்பட்டதுடன், ஆலயத்தின் புதிய தாதுகோபுரத்தில் புனிதத் நினைவுச்சின்னங்கள் ஞாயிற்றுக்கிழமை (8) பிரதிஸ்டை செய்யப்பட்டன.

புத்த மதத்தின் புனித நினைவுச்சின்னங்கள் புதிதாக நிர்மாணிக்கப்படும் இந்த தூபியில் ஞாயிற்றுக்கிழமை (08) பிரதிஷ்டை செய்யப்பட்டதுடன் திஸ்ஸ ரஜமஹா விகாரையின் பிரதமகுரு வண.பிந்தோட்டை நந்தராம தேரரின் அழைப்பின் பேரில் பாதுகாப்புப் பதவிநிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். திஸ்ஸ ரஜமஹா விகாரை அபிவிருத்தி அறக்கட்டளை, பக்தர்கள், படை உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களின் பங்கேற்புடன் பிரித் பாராயணங்களின் மத்தியில் ஜெனரல் ஷவேந்திர சில்வா புதிய அரைக்கோள தாதுகோபுரத்தின் கருவறையில் புனித நினைவுச்சின்னங்களை பிரதிஷ்டை செய்தார்.

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் வழிகாட்டுதலின் கீழ் திஸ்ஸ ரஜமஹா விகாரை அபிவிருத்தி அறக்கட்டளையின் நிதியுதவியுடன் 51 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவின் மேற்பார்வையின் கீழ் 5 வது பொறியியல் சேவை படையணி , யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையலகுகளின் படையினர் மற்றும் வடக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புடன் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

100 அடி உயர தூபியின் வரைப்படம் மொரட்டுவ பல்கலைக்கழக கட்டிடக்கலை பீடத்தினால் நிர்மாணிக்கப்பட்டதுடன் நிர்மாணத்திற்கு தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சமித்த மானவடு மற்றும் பேராசிரியர் நிமல் டி சில்வா ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் பேராசிரியர் சமித்த மானவடு, பேராசிரியர் நிமல் டி சில்வா, செல்வி துஷார தேனுவர உட்பட பலர் கலந்துகொண்டனர்.ஜெனரல் ஷவேந்திர சில்வா புதிய விகாரையின் புனித சின்னங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டதன் பின்னர் விகாரையில் புதிய புத்தர் சந்நிதியை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் கலந்து கொண்டார். அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருடன் சுமுகமாக கருத்துப் பரிமாற்றம் செய்து, நலன் கேட்டறிந்ததோடு, கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடினார்.

காங்கேசன்துறை வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ ரஜமஹா விகாரையில் புதிய தாதுகோபுர நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மத அனுஷ்டானங்கள் மற்றும் மகா சங்கத்தினரின் ஆசிகளுடன் 2021 ஜனவரி மாதம் யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தேவநம்பியதிஸ்ஸ மன்னனின் ஆட்சியின் போது (கிமு 250 - 210) சங்கமித்தா பிக்கு ஜம்புத்வீபத்திலிருந்து அனுராதபுரத்திற்குச் செல்லும் வழியில் தம்பகோல பட்டணத்திற்கு செல்லும் வழியில் ஓய்வெடுக்க வந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தின் நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கலந்துகொண்டார்.

அண்மையில்,விகாரையின் பிரதான பிக்குவின் அனுசரணையின் கீழ் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் யாழ்.குடாநாட்டில் சேவையாற்றி வரும் பாதுகாப்புப் படையினரால் விகாரையின் மீள் நிர்மாண பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது, இதன் விளைவாக, 67 ஆண்டுகளுக்குப் பிறகு, 2019 இல் விகாரை வளாகத்தில் 'கட்டின பூஜை' நடத்த முடிந்தது. இதனோடு சில மாதங்களுக்கு முன்னர் பாதுகாப்புச் செயலாளர் நாயகம் கமல் குணரத்னவின் (ஓய்வு) உதவியுடன் மேஜர் ஜெனரல் செனரத் பண்டாரவினால் (ஓய்வு) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விகாரைக்கு ஒரு பெரிய புத்தர் சிலையையும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இப் புனித நிகழ்ச்சிக்கு யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, வடக்கு முன்னரங்கு பராமரிப்புப் பிரதேச தளபதி மேஜர் ஜெனரல் விந்தித மகிந்த, 51 வது படைபிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, 52 வது படைபிரிவு தளபதி பிரிகேடியர் உதய ஹேரத், 55 வது படைபிரிவு தளபதி பிரிகேடியர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன, சிரேஷ்ட அதிகாரிகள், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் உறுப்பினர்கள், படையினர் மற்றும் திஸ்ஸ ரஜமஹா விகாரை அபிவிருத்தி அறக்கட்டளையின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.