Header

Sri Lanka Army

Defender of the Nation

04th May 2022 15:26:57 Hours

மாலி அமைதிகாப்பு பணிகளுக்கான 4வது படைக்குழுவினர் புறப்படத் தயார்

இரத்தினபுரி குருவிட்டவில் அமைந்துள்ள கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் இன்று காலை (4) மாலி ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்காக புறப்படும் 243 படையினர் அடங்கிய 4 வது குழுவினரின் பங்கேற்புடன் ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு சிவப்புகம்பள வரவேற்பளிக்கப்பட்டது.

இராணுவத்தின் 12 படையணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 அதிகாரிகள் மற்றும் 223 சிப்பாய்கள் அடங்கிய குழுவினர் மே மாத இரண்டாம் வாரத்தில் மாலிக்கு புறப்பட உள்ள நிலையில், தற்போது மாலியில் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் முதலாவது குழுவினர் நாடு திரும்ப உள்ளனர்.

கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் புதன்கிழமை (04) ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு கெமுனு ஹேவா படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் ஜானக விமலரத்னவினால் வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து, கெமுனு ஹேவா படையணியினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டது. அதனையடுத்து கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி அவர்களால் பிரதம விருந்தினருக்கு வரவேற்பளிக்கப்பட்டதோடு, பின்னர் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினரால் நிகழ்த்தப்பட்ட உரையின் போது, மேற்படி குழுவிலுள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் அர்பணிப்புக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன், கடமைகளை செய்யும் வேளையில் ஒழுக்கத்தை பேண வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். அத்தோடு ஒழுக்கமான சேவையினால் இலங்கை படையினர் இதுவரையில் பெற்றுக்கொண்ட பாராட்டுக்கள் தொடர்பிலும் அறிவுறுத்தினார்.

அதற்கமைய “ஒழுங்குமிக்க படையின் உறுப்பினராக நீங்கள் ஒரு சிப்பாய் என்பதுடன் ஓர் இராஜதந்திரியாக பணியாற்றுவீர்கள், இராஜந்திர மாற்றங்களை அறிந்து செயற்பட வேண்டும். இலங்கை தாய் மீது பக்தி கொண்டவர்கள் என்ற வகையில் இலங்கையின் தேசிய கொடி, ஐநா கொடி, இராணுவ கொடி மற்றும் கெமுனு ஹேவா படையணியின் கொடிகள் ஆகியவற்றின் கண்ணியத்தை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளீர்கள்” என்றும் தளபதியவர்கள் அறிவுறுத்தினார்.

1962 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கெமுனு ஹேவா படையணி தற்போது , 14 நிரந்தர படையலகுகளையும் 6 தொண்டர் படையலகுகளையும் கொண்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு முதலே ஹைடியின் ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை படையினர் அனுப்பட்டு வரும் நிலையில் 2012 தொடக்கம் கெமுனு ஹேவா படையணியின் வீரர்கள் லெபனானில் அமைதிகாக்கும் பணிகளுக்காக அனுப்பட்டு வருகின்றனர். அதனால் மேலைநாடுகளின் அமைதிகாக்கும் பணிகளில் மைல்கல் இலக்குகளை அடைந்துள்ள படையினர் என்ற வகையிலும் நாட்டிற்கு அதிகளவில் அந்நிய செலவாணி அவசியப்படுகின்ற தருவாயிலும் 4 வது குழுவாக மாலியில் உங்களது பணி மிகவும் அவசியமானது என்றும் தளபதியவர்கள் வலியுறுத்தினார்.

இந்த 4 வது குழுவின் பயிற்றுவிப்புச் செயற்பாடுகளுக்காக , இராணுவம் பல்வேறு படைப்பிரிவுகள் மற்றும் அரச நிறுவனங்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. இராணுவ தலைமையகத்தின் இராணுவ பதவி நிலைப் பிரதானி, படைத் தளபதிகள் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் பணிப்பகம், குக்குலேகங்க அமைதி காக்கும் பணி பயிற்சிப் பாடசாலை ஊழியர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் எனது பாராட்டுக்குரிவர்களே.

இலங்கை படையினர் இயலுமான வகையில் சிறந்த சேவை வழங்க வேண்டு என்ற நோக்கத்தில் செயற்படுகின்றமையினால் அவர்களுக்கு மென்மேலும் வசதி வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும் என்றும் அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஏனையவர்களால் முடியாது என்பதால் தொடர்ச்சியாக நற்பெயரை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

அத்தோடு, அமைத்திகாக்கும் படையினர் என்ற வகையில் ஒழுக்கத்துடன் நடந்துகொள்வதோடு, சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கை இராணுவக் கொடியை உச்சத்தில் பறக்கவிட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார். அறிவுத்திறன்களையும் பெருக்கிக்கொள்ள வாய்ப்பளிக்கும் வெளிநாட்டு களப் பணிகளின் போது இலங்கை படையினருக்கு காணப்படும் மதிப்பு தொடர்பிலும் ஜெனரல் ஷவேந்திர சில்வா உரையாற்றினார்.

மாலியில் அமைதிகாக்கும் பணிகளுக்காக புறப்பட்டுச் செல்லவிருக்கும் 20 அதிகாரிகள் மற்றும் 223 சிப்பாய்கள் அடங்கிய 4 வது குழுவின் கட்டளை அதிகாரி கேணல் சந்தன ஜயமஹா, குழுவின் இரண்டாம் கட்டளை அதிகாரி மேஜர் சீ ஏக்கநாயக்க அவர்களுடன் இணைந்து அணிவகுப்பை பரிசீலனை செய்தவற்காக தளபதியவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

நிகழ்வின் இறுதி கட்டமாக 12 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினருடன் குழு புகைப்படும் எடுக்கும் நிகழ்வில் தளபதியவர்கள் கலந்துகொண்டார்.

மேற்படி அமைதிகாக்கும் பணிகளுக்காக செல்லவுள்ள குழுவில் கெமுனு ஹேவா படையணியினர் அதிகளவில் உள்ளடங்கியிருப்பதோடு, இலங்கை கவச வாகனப் படையணி, இலங்கை பொறியியல் சேவை படையணி, இலங்கை சமிக்ஞை படையணி, மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி, பொறியியல் சேவை படையணி, இலங்கை இராணுவ சேவைப் படையணி, இலங்கை இராணுவ போர்க் கருவிகள் படையணி, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி, இலங்கை இராணுவ வைத்திய படையணி மற்றும் இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணி ஆகியவற்றின் சிப்பாய்களும் உள்ளடங்கியுள்ளனர்.

மேற்படி 4 வது குழுவினர் குகுலேகங்க மற்றும் மாதுரு ஓயாவிலுள்ள அமைதிகாக்கும் பணிகளுக்கான ஒத்துழைப்பு பயிற்சி பாடசாலைகளில் பல மாதங்களுக்கு முன்பாக பயிற்சிகளை ஆரம்பித்திருந்தனர்.

குருவிட்டவில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி, இலங்கை இராணுவ வள வழங்கல் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.