Header

Sri Lanka Army

Defender of the Nation

18th April 2022 16:43:08 Hours

“இராணுவம் மறைமுகமான எண்ணக்கருக்களுக்கமைய ஒருபோதும் பொதுமக்களுக்கு பாதகமான செயற்பாடுகளில் ஈடுபடாது” – இராணுவ தலைமையகத்தின் முதல் வேலைநாளன்று இராணுவ தளபதி தெரிவிப்பு

ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள இராணுவ தலைமையகத்தின் முதல் நாள் கடமைகள் இன்று (18) காலை வழமையான புத்தாண்டு கொண்ட்டாங்களின் அடிப்படையில் தேநீர் விருந்துபசாரத்துடன் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் ஆரம்ப அம்சமாக பிரதம அதிதியவர்களினால் சம்பிரதாயபூர்வமாக மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு, இராணுவ பதவி நிலை பிரதானி, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி, சிரேஷ்ட அதிகாரிகளின் பிரதிநிதிகள், இராணுவ தலைமையக ஆளணி நிர்வாக பணிப்பாளர், இராணுவ தலைமையக தலைமை சார்ஜண் மேஜர் மற்றும் சிவில் ஊழியர்களும் மங்கள விளக்கேற்றியதை தொடர்ந்து இராணுவ தளபதியின் உரை இடம்பெற்றது.

தொழில்முறை இராணுவம் என்ற வகையில் அவ்வப்போது இராணுவம் தொடர்பில் பரவும் வதந்திகள் மற்றும் போலிப் கட்டுக்கதைகளை கண்டு சலைக்ககூடாது என சகலரும் உறுதி கொள்ள வேண்டியது அவசியமாகும். இராணுவம் என்ற வகையில் அரசியலமைப்புக்கு இணங்க நாடு மற்றும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எவ்வேளையிலும் எம்மை சார்ந்துள்ளது. அதேநேரம் நிகரற்ற அமைப்பின் வீரர்களாக இரவு பகலாக சேவையாற்றி உங்களது கால் கைகளை இழந்து இன்று நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரம் மற்றும் சமாதானத்தை கொண்டுவருவதற்காக நீங்கள் ஒப்பற்ற தியாகத்தை செய்துள்ளீர்கள்.

நான் உட்பட இராணுவத்தில் தற்பொழுதும் சேவையாற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் நாட்டின் பாதுகாப்பிற்காக குறித்த நியமனங்களை வகிக்கின்றோம். நமது மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் போது காயங்களுக்கு உள்ளான நான், அரச மற்றும் அதன் அமைதியை விரும்பும் குடிமக்களின் நலன்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளித்தேன்.நாங்கள் எப்பொழுதும் மக்களுடன் இருக்கிறோம், அந்த சில கட்டுக்கதைகள் கூறுவது போல் நாங்கள் எந்த 'நிலையையும்' எடுக்க விரும்பவில்லை, நாங்கள் யாருக்கும் தீங்கு அல்லது துன்புறுத்தலை ஒருபோதும் ஏற்படுத்த மாட்டோம்என்பதோடு எந்த வகையிலும் யாருக்கும் சிரமத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக, எங்களது உதவியை பொலிஸார் கோருகின்ற வேளையில் பொலிஸாருக்கு உதவ இராணுவம் முன்நிற்கும் என இராணுவ தளபதியவர்கள் சுட்டிக்காட்டினார்.

நாம் அனைவரும் அறிந்ததை போன்று வேறு எந்தவொரு தரப்பினராலும் முகம்கொடுக்க முடியாத நிலையில் எங்களது படையினர் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அவசியமான அனைத்துவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றனர். கடந்த சில நாட்களில் நீங்கள் பார்த்தது போல், சில தவறான தகவல்களால் பிரச்சாரம் செய்யப்படும் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களோ அல்லது சில தனிப்பட்ட நலன்களைக் கொண்ட சில கூறுகளால் கூறப்படும் இரகசிய நிகழ்ச்சி நிரல்களோ எங்களிடம் இல்லை.

அதேபோல் நாட்டை பாதுகாக்கும் இராணுவம் எந்தவொரு வேளையிலும் மறைமுகமான எண்ணக்கருக்கள் மற்றும் குறுகிய நோக்கங்களை அடிப்படையாக கொண்டோ இயங்கும் அமைப்பல்ல என்பதுடன், அண்மைய நாட்களில் பொது மக்களால் முன்னெடுத்து வரும் அமைதிவழி போராட்டங்கள் மத்தியில் சில தரப்புக்களினால் முன்வைக்கப்படும் போலிக் குற்றச்சாட்டுக்களினால் அவர்களின் மனோநிலை புலப்படுகிறது என இராணுவ தளபதியவர்கள் சுட்டிக்காட்டினார்.

“நாட்டைப் பிளவுபடுத்தும் எல்ரீரீஈ அமைப்பினரின் முயற்சிகளுக்கு எதிரான போராட்டத்தில் நான் ஈடுபட்டிருந்தபோதும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில் எங்களால் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் என்னுடைய சொந்தக் கூட்டாளிகள் உட்பட சில பிரிவினருக்கு இருந்தது. நிச்சயமாக, ஒரு பொதுமகன் சூழலில், நான் அவர்களின் குரல்களையும் கவலைகளையும் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன், ஆனால் ஒரு சீருடை அணிந்த இராணுவ அதிகாரியாக, நாட்டிற்கு சேவை செய்ய அர்ப்பணிப்புடன், எனது மனசாட்சியின்படி எனது கடமைகளை இரவும் பகலும் செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். இதைத்தான் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம், மேலும் சிலதரப்பினர் எந்த அடிப்படையும் இல்லாமல் குற்றம் சாட்டுவது போல் 'நிலைப்பாடு' என்று அழைக்கப்படுவதை நாங்கள் எடுக்கக்கூடாது, ”என்று அவர் கூறினார்.அதேநேரம், மகன்கள் மற்றும் மகள்கள் கொவிட் தொற்றுஏற்படடுவிடும் என்ற பயத்தில் தங்கள் சொந்த பெற்றோரைப் பார்க்க தயக்கம் காட்டியபோதும் , அண்மைய காலத்தில் கொவிட் – 19 தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் வீரர்கள் பணியாற்றிய விதத்திற்காக குவிந்த பாராட்டுக்களையும் இவ்வேளையில் நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும். கட்டுப்பாடுகளுக்கு அடங்காமல் பரவிய கொவிட் – 19 தொற்றுநோயை கட்டுப்படுத்தும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டிருந்த போது கொவிட் -19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் என்ற வகையில் தானும் நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்ததெனவும் தளபதியவர்கள் சுட்டிக்காட்டினார்.

“அதனையடுத்து மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர்களும் அவர்களது குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட இராணுவ தளபதியவர்கள், இராணுவம் தனது தொழில் கண்ணியத்தைப் பேணி, நாட்டிற்கும் அதன் குடிமக்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்கி வெற்றிகளுடன் முன்னேற்றம் காண வேண்டும் எனவும் வாழ்த்தினார். அதேபோல் அடிப்படை, தீங்கிழைக்கும் நோக்கங்களை அடிப்படையாக கொண்டு முன்வைக்கப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பொருட்படுத்தாமல் நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்த புத்தாண்டிலும் உறுதிபூண வேண்டுமென கேட்டுக்கொண்ட ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வலியுறுத்தினார்.