Header

Sri Lanka Army

Defender of the Nation

01st April 2022 16:52:58 Hours

15 பாடசாலை மாணவர்களுக்கு படையினரால் மிதிவண்டிகள் அன்பளிப்பு

மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்து நோக்கில் அவர்களின் கடினமான போக்குவரத்து வழிமுறைகளை எளிதாக்கும் வகையிலும், 23 வது படைப்பிரிவின் கீழுள்ள 232 வது பிரிகேடின் 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியினர் வெளிநாட்டு நன்கொடையாளர்களுடன் இணைந்து திங்கட்கிழமை (04) மட்டக்களப்பு மாவட்டத்தில் காயன்குடா, திக்கிலிவெட்டை பாடசாலையின் 15 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாகக் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திரு ஜனக சமரசேகர மற்றும் திருமதி நிமாலி திஸாநாயக்க மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் திரு உதய குமார ஆகியோரால் மேற்படி மாணவர்களுக்கு அவசியமான சைக்கிள்களை கொள்வனவு செய்தவற்கு அவசியமான நிதி உதவிகள் வழங்கப்பட்டிருந்ததுடன், இந்நிகழ்வில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

232 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ருவன் விஜேசூரிய மற்றும் 12 தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் தினேஷ் சேனாரத்ன ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் வறுமையான குடும்பங்களிலிருத்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்க சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டன.

23 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நளின் கொஸ்வத்த அவர்களுடன் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.