05th April 2022 21:32:05 Hours
ஊடக அறிக்கை
இலங்கை இராணுவ தலைமையகத்தின் நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளரின் பணிப்புரைக்கமைய நான்கு இராணுவ மோட்டார் சைக்கிள் ரைடர் குழுவினர் பாராளுமன்ற கட்டிடத்தொகுதி வளாகத்திற்கு பிரவேசிக்கும் பாதையில் இடப்பட்டிருந்த வீதி தடைக்கு அருகில் சென்ற வேளையில் அங்கு கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் (உதவி பொலிஸ் அத்தியட்சர்கள்) இருவரின் பொருத்தமற்ற நடத்தை தொடர்பில் உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா பொலிஸ்மா அதிபரிடத்தில் இன்று மாலை (05) கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேநேரம் பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களும் பொலிஸ்மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரை தொடர்பு கொண்டு பொலிஸ் அதிகாரிகளின் பொருத்தமற்ற நடவடிக்கைக்கு குறித்து உரிய ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். (நிறைவு)