Header

Sri Lanka Army

Defender of the Nation

04th April 2022 17:51:28 Hours

பாதுகாப்பு படையினரின் வகிபாகம் தொடர்பில் பாதுகாப்பு ஆலோசகர்கள் / இணைப்பாளர்களுக்கு இராணுவ தளபதி விளக்கம்

தொழிற் தகைமை மிகுந்ததாக விளங்கும் இலங்கை இராணுவம் வேறு நோக்கங்களின்றி அரசியலமைப்புக்குச் இணங்கவே செயற்படும் என இலங்கையை தளமாக கொண்ட உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் தூதரகங்களின் பாதுகாப்பு இணைப்பாளர்கள் / ஆலோசகர்களுடன் இன்று (4) நடைபெற்ற சந்திப்பில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெளிவுபடுத்தினார்.

பாதுகாப்பு ஆலோசகர்கள்/இணைப்பாளர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் இங்கு தெளிவூட்டப்பட்டது.

அஸ்திரேலியா பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் இயன் கீத் கெய்ன், பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் கொமாண்டர் எம் ஷபில் பாரி, சீன இராணுவ, கடற்படை, விமானப்படை பாதுகாப்பு இணைப்பாளர் சிரேஷ்ட கேணல் வான் டோங், சீன உதவி பாதுகாப்பு இணைப்பாளர் கேணல் கை பின், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூட், இந்திய உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் பன்னெட் சுஷில், ஈரான் இராணுவ பாதுகாப்பு இணைப்பாளர் கேணல் ஹோமாயு அலி யாரி, ஜப்பான் பாதுகாப்பு இணைப்பாளர் கெப்டன் ககு புகௌரா, ,மாலைத்தீவுகள் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் இஸ்மாயில் நசீர் பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முஹம்மது சப்தர் கான், ரஷ்யா இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை பாதுகாப்பு இணைப்பாளர் கேணல் அலெக்ஸி ஏ பொண்டரேவ், ஐக்கிய இராச்சிய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் பிஜே கிளேட்டன் ஐக்கிய அமெரிக்க கடற்படை பாதுகாப்பு இணைப்பாளர் லெப்டினன் கொமாண்டர் ரிச்சர்ட் லிஸ்டர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.