Header

Sri Lanka Army

Defender of the Nation

29th March 2022 18:01:43 Hours

அரசாங்கத்தின் தேசிய வீட்டுத்தோட்ட திட்டத்திற்கு- 2022’ இராணுவத்தின் பங்களிப்பு

காணி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் 'தேசிய வீட்டுத்தோட்ட திட்டம் - 2022' (பசுமை தேசம்) செயற்திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் செயற்படும் இலங்கை இராணுவம், 'நமது வீட்டுத்தோட்டத்தில் இருந்து ஆரம்பிப்போம்' எனும் தொனிப்பொருளில் இன்று காலை 29 திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தை அண்டிய நடைபாதை வளாகத்தைச் சுற்றி சுமார் 500 மரக்கறி நாற்றுக்களை நட்டு தனது பங்களிப்பை வழங்கியது.

காணி அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க, பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஒன்றுகூடி, காலை 9.18 மணியளவில் கத்தரி செடிகள், ஓக்ரா, மிளகாய், தக்காளி, காட்டு கத்தரிக்காய் (திப்பட்டு) உள்ள 500 செடிகளை நட்டு அனைத்து அரச நில வளாகங்களிலும், 20 பேர்ச் அல்லது அதற்கும் குறைவான அனைத்து தனியார் நிலங்களிலும் காய்கறி பயிர்களை பயிரிட பரிந்துரை செய்யப்படுகின்ற 'ஹரித தேயக்' எனும் தேசிய திடடத்திற்கு தங்களது பங்களிப்பபை வழங்கினர்.

ஹோமாகம கஹதுடுவவில் இடம்பெறும் பிரதான நிகழ்வுடன் இராணுவத்தினரால் பராமரிக்கப்பட்டு வரும் நடைபாதை வளாகத்தில் இராணுவத் தளபதி அனைத்து படையினருடன் இணைந்து காலை 9.18 மணியளவில், நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பிரதான வைபவத்துடன் இணைந்து அந்த மரக்கறி செடிகளை நட்டார். இதேவேளை, நாடளாவிய ரீதியில் 331 பிரதேச செயலகங்கள் 20 பேர்ச்சஸ் அல்லது அதற்கும் குறைவான காணிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மரக்கறி நாற்றுகளை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தில் முலம் இந் நிகழ்வில் இணைந்து கொண்டன.

மேலும், கரந்தெனிய, நிரவிய, அடியபுளியகுளம், மஹவ, மாணிக் பாம், கிளிநொச்சி, வெள்ளாங்குளம், அக்கராயகுளம், காங்கேசன்துறை, முல்லைத்தீவு மற்றும் பனாகொட இராணுவப் பண்ணைகளில் உள்ள படையினர் ஒரே நேரத்தில் அந்தந்த விவசாய நிலங்களில் காய்கறி நாற்றுகளை நட்டு தேசிய திட்டத்தில் இணைந்தனர்.

இராணுவ தலைமையகத்திற்கு அருகாமையில் இன்றைய நிகழ்வு விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் அரோஷ ராஜபக்ஷ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்லா, நிதி முகாமைத்துவக் கிளையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர, உபகரண பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையிணர் இராணுவத் தலைமையகம் அருகே செவ்வாய்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்றனர்.

(இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற பிரதான விழாவிற்குப் பின்னர் மாகாண பங்கேற்பு தொடர்பான புகைப்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளன)