19th March 2022 08:47:10 Hours
இலங்கை இராணுவத்தில் 34 வருட களங்கமற்ற சேவையை பூர்த்தி செய்துகொண்டு ஓய்வுபெறும் இலேசாயுத காலாட் படையின் அதிகாரியான இராணுவத்தின் வழங்கல் பிரிவு பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனர் பிரியந்த கமகே அவர்களுக்கு புதன்கிழமை (16) இராணுவ தளபதியின் அலுவகத்திற்கு அவரது குடும்பத்தாருடன் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அழைப்பிக்கப்பட்ட குறித்த அதிகாரின் அர்ப்பணிப்பான சேவைகளை நினைவுகூர்ந்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா பல்வேறு நியமனங்களின் கீழ் அவரால் ஆற்றப்பட்ட சேவைக்கும் பாராட்டு தெரிவித்தார்.
இதன்போது "நீங்கள் ஓர் உண்மையுள்ள அதிகாரி, அதனை நான் அதிகளவில் உணர்ந்துள்ளேன். அந்த சவாலான பாதையே உங்களை மேஜர் ஜெனரல் நிலையை அடையச் செய்தது. காலாட்படை வீரராக உங்களின் முன்மாதிரியான பங்களிப்பும் கடின உழைப்பும் உங்களை வழங்கல் பிரிவு பணிப்பாளர் நாயமாக உயர்த்தியது. நீங்கள் இராணுவத்தால் வளர்க்கப்பட்ட ஒரு பெருமைமிக்க மேஜர் ஜெனரலாக ஓய்வுபெறுகிறீர்கள், அதன் கண்ணியம் எந்த வகையிலும் மட்டுப்படாமலும் களங்கப்படாமலும் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. உங்கள் இரு பிள்ளைகளுக்காகவும் நல்ல மனநிலையுடன் இருங்கள், ஏனென்றால் நீங்கள் நாட்டைக் காக்கப் போர்க்களத்தில் போராடிய போது அவர்களை தற்போதைய நிலைமைக்கு உருவாக்க உங்களது மறைந்த துணைவியார் அயராத உழைப்பை வழங்கியுள்ளதால் அவரும் பாராட்டுக்கு உரித்தானவர் என ஜெனரல் ஷவேந்திர சில்வா சுட்டிக்காட்டினார்.
போர்க்களத்தில் பெருமளவு வீரர்கள் காயமடைந்திருந்த போதிலும் ஒரு காலாட்படை வீரராக நீங்கள் காயமின்றி உயிர் பிழைத்திருப்பதும் சிறப்புக்குரியதாகும். அந்த துணிச்சலுடன் இராணுவ சேவையில் கடினமான பயணத்தை தொடர்ந்து இரு பதக்கங்களையும் அடைந்துள்ளீர்கள். உங்களது சக அதிகாரிகளிலும் சிலர் மாத்திரமே உங்களை போன்ற இலக்குகளை அடைய முடியும் எனவும் இராணுவ தளபதி சுட்டிக்காட்டினார்.
மேஜர் ஜெனரல் பிரியந்த கமகே உடன் வருகை தந்திருந்த அவரது இரண்டு பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் எதிர்காலத் திட்டங்களைக் கேட்டறிந்துகொண்டதோடு, "எதிர்காலத்திலும், அவர்களுக்கு உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் தனக்கு தெரியப்படுத்துமாறும் தயக்கமின்றி உங்கள் அனைவருக்கும் உதவ நான் தயாராக இருக்கிறேன்," என்றும் உறுதியளித்தார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரியந்த கமகே, தனது சேவைக்காலத்தில் இராணுவத் தளபதியிடமிருந்து கிடைக்கப்பெற்ற தொடர்ச்சியான ஆதரவு, ஊக்குவிப்பு மற்றும் சரியான வழிகாட்டல்களுக்கும் நன்றி தெரிவித்தார். “ஐயா, நீங்கள் எப்பொழுதும் எங்களின் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட சிந்தனைகளுடன் எங்களுடன் நின்று போர்க்களத்திலும் மற்ற இடங்களிலும், குறிப்பாக நாங்கள் 53 வது படைப்பிரிவில் சேவையாற்றிய காலப்பகுதியிலும் எங்களை சிறந்த முறையில் வழிநடத்தினீர்கள். குடும்பத்தில் எங்கள் துயரமான தருணங்கள் வந்த போது தந்தையை போலிருந்து நீங்கள் வழங்கிய ஆலோசனையும் ஆதரவும் எங்களுக்கு மகத்தான முறையில் உதவியது. மன நிம்மதியையும் அளித்தது. நீங்கள் சிப்பாய் ஒருவரின் எண்ணங்களை அறிந்து, அவர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் மன உறுதியை அதிகரிக்கவும் முடிந்த அனைத்தையும் செய்கிறீர்கள்" என்றும் ஓய்வுபெறும் அதிகாரி தெரிவித்தார்.
சந்திப்பின் நிறைவில் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் மேஜர் ஜெனரல் பிரியந்த கமகே அவர்களின் சேவையை பாராட்டி சிறப்பு நினைவு பரிசொன்று வழங்கபட்டதுடன், அவரது குடும்பத்தாருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேஜர் ஜெனரல் பிரியந்த கமகே அவர்களின் விபரம் வருமாறு:
மேஜர் ஜெனரல் கமகே தனது சேவைக்காலத்தில் 241 பிரிகேட் தளபதி, 532 பிரிகேட் தளபதி, யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி, இராணுவத் தலைமையகத்தில் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டப் பணிப்பக பணிப்பாளர் நாயகம், பாதுகாப்பு பதவிநிலை பிரதானி அலுவலகத்தின் பொதுப்பணி பணி்பபாளர் ஆகிய நியமனங்களுடன் இறுதியாக இராணுவ தலைமையகத்தின் வழங்கல் பிரிவு பணிப்பாளர் நாயகமாக நியமனம் வகித்தார்.
அவர் பாகிஸ்தானில் இளம் அதிகாரிகளுக்கான கற்றைநெறி, இந்தியாவில் கனிஷ்ட கட்டளை பாடநெறி, பங்களாதேஷில் அசாத்திய இலக்குகளை கண்டறிதல் தொடர்பான பாடநெறி, இந்தியாவில் பாராசூட் பாடநெறி, பங்களாதேஷில் படையலகு தளபதிகளுக்கான பாடநெறி, பங்களாதேஷில் தேசிய பாதுகாப்புப் கற்கை, ஜப்பானில்
தெற்காசியாவிற்கான பல்தேசிய ஒத்துழைப்புத் திட்டம் தொடர்பான கற்கைநெறி ஆகியவற்றை தொடந்துள்ளர். சுயவிபரம் சுருக்கமாக:
பிரீதீப் ஜோ பிரியந்த கமகே 1987 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார்.
தியத்தலாவ - இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர், அவர் இரண்டாம் லெப்டினனனாக அதிகாரவாணையினைப் பெற்றார். 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி இலங்கை இலேசாயுத காலாட்படையில் இணைந்து கொண்ட அவர், இராணுவ சேவைக் காலத்தின் அடுத்தடுத்த பதவி நிலைகளையும் எட்டினார். 03 ஆகஸ்ட் 2020 அன்று மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்ட அவர், 55 வயதை எட்டியுள்ள 24 மார்ச் 2022 அன்று இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெறவுள்ளார்.
மேஜர் ஜெனரல் பிரியந்த கமகே மிகவும் நம்பகமான, விசுவாசமான மற்றும் ஒழுக்கமான சிரேஷ்ட அதிகாரி ஆவார், அவர் நிறுவனத்தின் உயர் தொழில்முறை தரத்தை உறுதி செய்வதற்காக எதிர்பார்ப்புகளுக்கும் அப்பால் சென்று கடமைகளை நிறைவேற்றி வருகிறார். ஓய்வுபெறும் மூத்த மேற்படி அதிகாரி தனது சேவைக்காலத்தில் கீழ்காணும் நியமனங்களை வகித்துள்ளார்.
ரைபிள் கம்பெனியின் கட்டளை அதிகாரி, 14 வது இலங்கை இலேசதயுத காலாட் படையின் பணிநிலை அதிகாரி - 3, பனாகொட இராணுவ உடற்பயிற்சி கல்வி மையதின் பணிநிலை அதிகாரி - 3 (நடவடிக்கைகள்), நடவடிக்கை படை 1 இன் பணிநிலை அதிகாரி 2 (ஒருங்கிணைப்பு), யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக நிர்வாக அணியின் அதிகாரி கட்டளைகள், 6 வது இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையின் இரண்டாம் நிலை கட்டளை அதிகாரி, 11 வது படைப்பிரிவின் பணிநிலை அதிகாரி - 1 (ஒருங்கிணைப்பு) , 23 வது படைப்பிரிவு தலைமையகத்தின் பணிநிலை அதிகாரி - 1 (ஒருங்கிணைப்பு) , இராணுவ தலைமையக நடவடிக்கை படையணி 3 இன் கட்டளை அதிகாரி, 15 வது இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 56 வது படைப்பிரிவுகளின் கேணல் பொதுப்பணியாகவும் சேவையாற்றியுள்ளார்.
அதேநோல் 631 பிரிகேட் தளபதி, 241 பிரிகேட் தளபதி, 532 பிரிகேட் தளபதி, 532 பிரிகேட் தளபதி, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட பணிப்பகத்தின் பணிப்பாளர், இராணுவ தலைமையகத்தின் பொதுப்பணி பணிப்பக பணிப்பாளர் நாயகம் ஆகிய நியமனங்களையும் வகித்துள்ள மேற்படி சிரேஷ்ட அதிகாரி அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைக்கான பின்வரும் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
ரண விக்கிரம பதக்கம் (RWP), ரண சூர பதக்கம் (RSP) (இரண்டு முறை), தேச புத்ர பதக்கம், கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம் மற்றும் கிளாஸ்ப், வடக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம் மற்றும் கிளாஸ்ப், பூர்ண பூமி பதக்கம், வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம், 50வது சுதந்திர தின நினைவு தினம் பதக்கம், இலங்கை இராணுவத்தின் 50வது ஆண்டு விழா பதக்கம், இலங்கை ஆயுத சேவைகள் நீண்ட சேவை பதக்கம் மற்றும் சேவாபிமானி பதக்கம் மற்றும் சேவா பதக்கம் ஆகியவற்றையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கீழ் காணும் வெளிநாட்டுப் கற்றை நெறிகளையும் மேற்படி சிரேஷ்ட அதிகாரி வெற்றிகரமாகப் பின்பற்றியுள்ளார்:
இளம் அதிகாரிகளுக்கான கற்றைநெறி - பாகிஸ்தான், படையலகு கட்டளை மற்றும் பொதுப்பணி தொடர்பிலான கற்கைநெறி - பங்களாதேஷ், கனிஷ்ட கட்டளை அதிகாரிகளுகான பாடநெறி - இந்தியா, அசாத்திய இலக்குகளை கண்டறிதல் தொடர்பான பாடநெறி – பங்களாதேஷ் , பெரசூட் கற்கைநெறி - இந்தியா, படையலகு தளபதி பாடநெறி - பங்களாதேஷ், தேசிய பாதுகாப்பு கற்கைநெறி - பங்களாதேஷ், இராஜதந்திர சான்றிதழ் கற்கைநெறி மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் சர்வதேச கற்கை நெறி.