Header

Sri Lanka Army

Defender of the Nation

18th March 2022 14:08:00 Hours

தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய போரில் உயிர்நீத்த வீரரின் மகளுக்கு புதிய வீடு

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் போரில் உயிர்நீத்த வீரரான கனேமுல்ல கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தை சேர்ந்த லெப்டினன் கேணல் நிலை அதிகாரியொருவரின் மகளுக்கு இன்று (18) காலை 1.5 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு வழங்கி வைக்கப்பட்டது.

7 வது கெமுனு ஹேவா படையணியின் லெப்டினன் கேணல் கே.எல்.கே நாணயக்கார முல்லைத்தீவு பிரதேசத்தை புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதற்கான கள நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது, 2009 பெப்ரவரி முதலாம் திகதி காலை 6.00 மணியளவில் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார். மேற்படி, வீரரின் குடும்பத்தாருக்கு புதிய வீட்டினை நிர்மாணிக்கும் பணிகள் 7 வது கெமுனு ஹேவா படையணியினரால் ஆளணி விவகார பணிப்பகத்துடன் இணைந்து 19 ஜூன் 2020 அன்று ஆரம்பிக்கப்பட்டிருந்த போதும், கொவிட் - 19 தொற்றுநோய் பரவல் காரணமாக இப்பணிகள் தாமதமடைந்திருந்தன.

தளபதியவர்களின் எண்ணக்கருவுக்கமைவான ஆளணி விவகார பணிப்பகத்தினால் 5 வது கட்டமாக முன்னெடுக்கப்பட்ட மேற்படி வீட்டுத்திட்டத்தினை முன்னெடுப்பதற்காக 12 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருந்ததோடு, கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தினால் 3 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருந்தது. அதன் கீழ் நாட்டிற்காக தன்னுயிரை தியாகம் செய்கையில் லெப்டினன் கேணல் கேஎல்கே நாணயக்கார அவர்களின் அப்போதைய 2 வயதும் தற்போது 15 வயதாகும் மகள் மற்றும் விதவை மனைவி திருமதி பீ இரோசினி ஆகியோரின் நலனை கருதி புதிய வீடு நிர்மாணித்து கொடுக்கப்பட்டது.

குறித்த வீட்டை வழங்கி வைப்பதற்கான நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியினால் வரவேற்பளிக்கப்பட்டது. அதனையடுத்து மகா சங்கத்தினரின் ‘செத் பிரித்’ பாராயணங்களுக்கு மத்தியில் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்ட வீட்டின் சாவி உயிர் நீத்த வீரரின் மகளான செத்மி அயேந்திரா நாணயக்காரவிடம் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வின் ஆரம்ப அம்சமாக சிறப்பு விருந்தினர்களால் மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டதோடு, சம்பிரதாயபூர்வமான நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதன்போது, பயனாளி குடும்பத்தினருக்கு விஷேட பரிசொன்றை வழங்கிய ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமையவும் வாழ்த்து கூறினார்.

போர் வீரர்கள் மற்றும் படையினரின் எதிர்பார்ப்புக்கிணங்கள் அவர்களது கௌரவமானதும் வசதியுடனும் கூடியதுமான வாழ்வாதார வசதிகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தளபதியவர்களின் எண்ணக்கருவுக்கமைவான “முன்னகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020 – 2025” இற்கு அமைய போரில் உயிர் நீத்த குடும்பங்களின் நலனுக்காக முடிந்த வரையில் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிகழ்வில், சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளடங்களாக கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே, 14 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சமந்த விக்கிரமசேன, ஆளணி விவகார பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் மஞ்சுள மாயாதுன்னே ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.