17th March 2022 09:34:35 Hours
34 வருடங்களுக்கும் மேலான புகழ்பெற்ற மற்றும் பாராட்டத்தக்க சேவையை நிறைவு செய்தமைக்கான, உணர்வுபூர்வமான வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களுக்கு மத்தியில், முதலாம் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்கள் இன்று (14) பிற்பகல் தனது நம்பிக்கைக்குரியவரும் தன்னை ஊக்குவிப்பவருமான பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தில் தனது பாரியாருடன் சந்தித்து தனது ஓய்வு தொடர்பில் கலந்துரையாடினார்.
மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க தனது முன்மாதிரியான இராணுவ வாழ்க்கையின் போது அவருடைய தனிப்பட்ட சிறப்புச் எண்ணக்கருக்களுடன், சிறப்பு படையணியின் சிறந்த சிப்பாயாக திகழ்ந்ததோடு, இராணுவத்திற்கு பலத்தின் கோபுரமாகவும், வளர்ந்துவரும் அதிகாரிகளுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த சந்திப்பின் போது பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தனது சிறப்புத் திறன் கொண்ட ஒரு காலாட்படை வீரராக அவரது சேவை தொடர்பில் நினைவுகூர்ந்திருந்ததோடு, போர்களத்தில் வெற்றிக்காக படையினரை வழிநடத்திய விதம் தொடர்பிலும் நினைவுகூர்ந்தார்.
"உங்கள் திறமை, திறன், கட்டளைத் திறன், படையினரை தந்திரோபாயமாக கையாளும் விதம், மிக உயர்ந்த நம்பிக்கை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றுடன் உங்களைப் போன்ற ஒருவரை தேடியறிவது மிகவும் சவாலாக உள்ளது. போர்க்களத்தில் நீங்கள் மூன்று முறை பலத்த காயம் அடைந்தீர்கள். அதனை பொருட்படுத்தாமல் 1996 ல் கிளிநொச்சியை கைப்பற்ற பாடுபட்ட விதமும் அதே ஆண்டில் பயங்கரவாதிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி முல்லைத்தீவு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட விதமும் இன்றும் நினைவிருக்கிறது. 2008 மனிதாபிமான நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியிருந்த வேளையில் கிளிநொச்சி மீட்கப்பட்ட்டிருந்தமை பெரும் வலுவாக அமைந்திருந்தது.
அதேநேரம், சிறப்புப் படையணியின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும், முதலாம் படையணியின் தலைமையகத்தை உருவாக்கியமைக்காகவும் அதன்கீழ் அவசர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தமைக்கும் இராணுவ தளபதியவர்கள் நன்றி தெரிவித்தார். "சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவரான நீங்கள், நிறுவனத்தின் சிறந்த நலன்களுக்காக உங்களால் முடிந்த அனைத்தையும் செய்தீர்கள், உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து பணிகளையும் மிகவும் திறம்பட நிர்வகித்தீர்கள். நேர்மையான பண்புடன் சவால்கள் அனைத்துக்கும் முகம்கொடுத்துள்ளீர்கள். உங்கள் தலைமைத்துவம் மற்றும் வீரத்தின் உண்மையான வெளிப்பாடாக உங்களது முகாமைத்துவச் செயற்பாடுகள் அமைந்திருந்தன. அந்த நினைவுகள் வளர்ந்துவரும் அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கும். அதேபோல் போர்க்களத்தில் பல மைல்கல் வெற்றிகளை நினைவுக்கூறும் விதமான உங்களது வாழ்க்கை அமைந்திருக்கும் எனவும் தளபதியவர்கள் தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வில் கலந்துகொண்ட சிரேஷ்ட அதிகாரியின் துணைவியார் திருமதி பிரியந்தி ரணசிங்க அவர்கள் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு விசேட பாராட்டுக் கடிதம் மற்றும் நன்றிக் கடிதத்தை வழங்கி நிகழ்வை சிறப்பித்தார். அந்த கடிதத்தில் தற்போதைய இராணுவத் தளபதியான நீங்கள் எனது கணவரான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களுக்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான போரின் போது தலைமதை்துவ செயற்பாடுகளுக்கும். நெருக்கடியான காலங்களிலும் அவறுக்கு உறுதுணையாவிருந்து ஊக்கமளித்தமை தொடர்பிலும் இன்றளவில் தனது கணவர் சிரேஷ்ட வீரராகவும் சிப்பாய்களின் பாராட்டுக்கு பாத்திரமாக விளங்குவதாகவும் சுட்டிக்காட்டியிந்தார்.
இச் சந்திப்பின் போது ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட தளபதியவர்கள், அவரது துணைவியாருடனும் எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். மேலும், ஜெனரல் சவேந்திர சில்வா, அமெரிக்காவில் வசிக்கும் அவர்களது ஒரே பிள்ளையின் கல்வி முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி இராணுவத் தளபதியின் அறிவுரைகளுக்கு நன்றி கூறியதோடு, சேவைக்காலத்தில் அவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்பு மற்றும் ஊக்குவிப்புக்கும் நன்றிகளை தெரிவித்தார். "எனக்கு முன்மாதிரியாக இருந்த நீங்கள் எனது தொழிலை பெரிதும் ஊக்குவித்தீர்கள், உங்கள் முயற்சியால் வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் முதல் கேணலாக பணியாற்ற என்னை நியமித்தீர்கள். நீங்கள் எனது திறமைகளை உன்னிப்பாகக் கவனித்து, பல்வேறு பணிகளுக்கும் பொறுப்புகளுக்கும் என்னை பரிந்துரைத்தீர்கள். உங்களது ஊக்குவிப்புதான் எங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. நீங்கள் எங்களை ஒரு மூத்த சகோதரனாக வழி நடத்தியுள்ளீர்கள், அதை என்னால் மறக்கவே முடியாது. எனது படைத் தளபதியாக இருந்த நினைவுகளும் ஒருபோதும் மறவாதவையாகும். மேலும் தந்திரோபாய நடவடிக்கைகளில் எங்கள் சொந்த முடிவுகளை எடுக்க நீங்கள் எங்களுக்கு உதவியுள்ளீர்கள் என மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க தெரிவித்தார்.
உரையாடலின் முடிவில், ஜெனரல் சவேந்திர சில்வா, ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்கவுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.
மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க தொடர்பிலான விவரம் வருமாறு;
மேஜர் ஜெனரல் ஹரேந்திர பராக்கிரம ரணசிங்க இலங்கை இராணுவ சிறப்புப் படையணியின் அதிகாரி ஆவார். 1967 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி கொழும்பில் பிறந்த இவர் கொழும்பு திருத்துவ கல்லூரியில் கல்வி பயின்றார்.
அவர் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்த பின்னர், 1986 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்துக் கொண்டார் 1987 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி அதிகாரவாணை பெற்றுகொண்டதோடு, கெமுனு ஹேவா படையணியில் இணைக்கப்பட்டார். 1990 இல் அவர் தானாக முன்வந்து சிறப்புப் படையணியில் இணைந்துக் கொண்டதுடன், சிறப்புப் படைகளின் அடிப்படை பாடநெறி எண் 07 இனையும் தொடர்ந்துள்ளார்.
2 வது சிறப்புப் படையணியின் கட்டளை அதிகாரி, முதலாவது சிறப்புப் படையணியின் கட்டளை அதிகாரி, சிறப்புப் படைப் பயிற்சிப் கல்லூரியின் தளபதி, 58 வது படைப்பிரிவின் கேணல் பொதுப்பணி, 571 பிரிகேட் தளபதி, உள்ளிட்ட பல சிறப்பு நியமனங்களை வகித்துள்ள அவர். சிறப்புப் படையணி பிரிகேட் தளபதி , இராணுவப் பயிற்சிப் பாடசாலை தளபதி, நிலையத் தளபதி, சிறப்புப் படை தலைமையக தளபதி, பிரிகேடியர் பொதுப்பணி - வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, 56 வது படைப்பிரிவின் தளபதி, கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மற்றும் முதலாம் படையின் தளபதியாகவும் நியமனம் வகித்திருந்தார்.
மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பட்டம் பெற்றவர். இந்தியா, பாகிஸ்தான், சீனா, இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளில் உள்ளுர் மற்றும் வெளிநாடுகளில் பல இராணுவப் பயிற்சி பாடநெறிகளிலும் பங்கேற்றுள்ளார்.
மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, பயங்கரவாதிகளுக்கு எதிராக போர்க்களத்தில் தனது வீரம் மற்றும் துணிச்சலுக்காக "ரண விக்கிரம பதக்கம" மற்றும் "ரண ஷுர பதக்கம" ஆகிய இரண்டு வீர பதக்கங்களை பெற்றுள்ளார். பயங்கரவாதிகளுடனான நேரடி மோதலின் போது காயமடைந்த போதிலும் அவர் நடவடிக்கைகளில் தொடர்ந்து பணியாற்றியிருந்தமை சிறப்பம்சமாகும்.
அவர் ஒரு தூய்மையான மற்றும் அவதூறுகளற்ற நடத்தைப் பதிவேட்டைப் கொண்டுள்ளதோடு, 34 ஆண்டுகள் இராணுவத்தில் சேவையாற்றியுள்ளதோடு திருமதி பிரியந்தி ரணசிங்க அவர்களை திருமணம் முடித்து ஓரு மகனின் தந்தையாகவும் உள்ளார்.