Header

Sri Lanka Army

Defenders of the Nation

12th March 2022 15:16:38 Hours

இராணுவ பொறியியலாளர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைக் கொண்டு மாத்தறை புறா தீவிற்கு மாற்று பாலம்

இராணுவத் தளபதிக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் தொழில்நுட்ப ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் தகுதி பெற்ற இலங்கை இராணுவப் படையினர் மாத்தறை புறா தீவிற்கும் பிரதான நிலப்பகுதிக்கும் இடையிலான இடிந்து விழுந்த பாலத்திற்கான தற்காலிக மாற்று பாலம் ஒன்றை ஒரு வாரத்திற்குள் அமைப்பதற்கான சவாலை ஏற்றுக்கொண்டனர். அதன் திறப்பு விழா மகா சங்க சபையின் ஷிமோபாலி மஹா விஹாரை வன்ஷிக ஸ்ரீ ரோஹண 'உபோஷிதகாரய' விகாரையின் வளாகத்தில் இன்று (12) காலை நடைபெற்றது

ஸ்ரீ ரோஹண சங்க சபை தனது வருடாந்த உபசம்பத விநாயகர்ம (நவீனர்களின் உயர் அர்ச்சனை) விரைவில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இறுதி செய்திருந்ததால், அடுத்த பௌர்ணமி தினத்திற்கு (17)க்கு முன்னதாக தற்காலிக பாலம் ஒன்றை அவசரமாக அமைப்பது முன்னுரிமையாக இருந்தது. சில நாட்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக தொங்கு பாலம் இடிந்து விழுந்தது, புறா தீவிற்கும் பிரதான நிலப்பகுதிக்கும் இடையிலான போக்குவரத்து திடீரென துண்டிக்கப்பட்டதிலிருந்து பின்னடைவை ஏற்படுத்தியது. தீவுக்கும் பிரதான நிலப்பகுதிக்கும் இடைப்பட்ட இடைவெளியில் ஏற்பட்ட கடல் அலைகள் உயிருக்கு ஆபத்தை விளைவித்து தீவின் முக்கிய போக்குவரத்தை சீர்குலைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை நடைபெற்ற திறப்பு விழாவானது, ஷிமோபாலி மகா விகாரை வன்ஷிக ஸ்ரீ ரோஹண மகா சங்க சபையின் அனு நாயக்க தேரர் வண. ஒமரே கஸ்ஸபா தேரர் தலைமையில், அமைப்பின் மற்றும் மகா சங்க உறுப்பினர்கள்சரியான நேரத்தில் ஏற்பாடுகள் செய்த பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை இந்நிகழ்வில் பிரதம அதிதயாக கலந்து கொள்வதற்கு அழைத்தனர். அவர் பிரதான நில நுழைவாயிலுக்கு வந்தவுடன் 'செத்பிரித்' பராயணங்களுக்கு மத்தியில் நாடாவை வெட்டி திறந்து வைக்கப்பட்டதுடன் இராணுவத்தினால் அமைக்கப்பட்ட புதிய பாலத்தின் மீது நடந்து புறா தீவிக்கு சென்றார். அங்கு இராணுவத் தளபதி புத்தருக்கு படையலிட்டு வணங்கினார்.

வருகைக்கு பின்னர் நடைபெற்ற தர்ம போதனையின் பின்னர் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் அனு நாயக்க தேரர் வண. ஒமரே கஸ்ஸபா நாயக்க தேரருக்கு, சம்பிரதாய பூர்வமாக திட்டத்தை நிறைவு செய்தமைக்கான முறையான கடிதத்தை வழங்கினார். பதிலுக்கு, அனு நாயக்க தேரர், இராணுவத்தின் வெற்றிகரமான திட்டத்திற்கு அற்புதமான பங்களிப்பை ஈர்க்கும் விதத்தில் அங்கீகரித்ததுடன், அன்றைய பிரதம அதிதிக்கு பாராட்டுக்குரிய வரலாற்றைக் கொண்ட ஒரு குறியீட்டு பத்திரத்தையும் வழங்கினார். 12 வது இலங்கை பொறியியலாளர் படையணி, இலங்கை பொறியியலாளர் படையணியின் 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணு பதிலளிப்பு படையணி, 16 வது இலங்கை களப்பொறியியலாளர் படையணி, 4 வது (தொ) பொறியியலாளர் சேவை படையணி, 12 வது பொறியியலாளர் சேவை படையணி, 613 வது பிரிகேட் மற்றும் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணி ஆகியவற்றின் படையினர் இணைந்து இந்த திட்டத்திற்கு பணியாளர்களாக சரியான நேரத்தில் முடிப்பதற்கு தீவிரமாக பங்களித்தனர்.அன்றைய விழாவில் தேரர்கள் குறுகிய காலத்தில் பாலத்தை நிர்மானிக்க முன் வந்த அனைவரையும் பாராட்டினார்கள். தலைமைக் களப் பொறியுலாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அனைத்து கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் தலைமைக் களப் பொறியாளர் ஆற்றிய உரையின் போது இந்த முயற்சிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் பணிப்புரையின் பேரில் இராணுவத்தின் பிரதான களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர, மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே, பொறியியலாளர் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன, 61 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தொட்ட, , பொது பொறியியலாளர் பிரிகேட் தளபதி பிரிகேடியர் அசங்க பெரேரா, , 613 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடிதுவாக்கு மற்றும் பிரதேச கட்டளை அதிகாரிகள் உடனடியாக சில நாட்களுக்கு முன்னர் புறா தீவையும் பிரதான நிலப்பகுதியான மாத்தறை நகரத்தையும் மீண்டும் இணைக்க தற்காலிக மாற்று பாலம் கட்டும் பணியை மேற்கொண்டனர்.

பாலம் உடைந்தமையை கேள்வியுற்ற அதிமேதகு ஜனாதிபதி விகாரையின் வருடாந்த விழாவை முன்னிட்டு மாற்று பாலம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத் தளபதிக்கு அறிவுறுத்தினார். மேலும் மாத்தறை நகரத்தில் இத்தொங்கு பாலம் சுற்றுலா பயணிகளை கவரும் இடமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.