Header

Sri Lanka Army

Defender of the Nation

08th March 2022 18:15:17 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் இராணுவப் மகளிர் சிப்பாய்கள் பங்குபற்றினர்

இலங்கை இராணுவத்தினால் இராணுவ சேவை வனிதையர் பிரிவுடன் இணைந்து தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக வியர்வை சிந்தும் இராணுவ மகளிர் வீராங்கனைகள் மற்றும் ஏனைய மகளிர் உறுப்பினர்களுக்கு அங்கிகாரம் அளிக்கும் முகமாக சர்வதேச மகளிர் தினத்தன்று 'செனெஹசே கெடெல்லா' என்ற கருப்பொருளில் பனாகொட இராணுவ முகாம் உள்ளக அரங்கில் இன்று (8) நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சனின் அழைப்பின் பேரில் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் சில சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து இந்த கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். வருகை தந்த பிரதம அதிதியை மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்கள் அன்புடன் வரவேற்றார். பெண்ணியத்தின் பெருமை மற்றும் சமூகத்திற்கு அவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் முகமாக இடம்பெற்ற நிகழ்வினை ஊக்குவிக்கும் முகமாக ‘தெரண’ தொலைக்காட்சியினால் இசையுடன் கூடிய முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.

பாரம்பரிய எண்ணெய் விளக்கு ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி உயிர்நீத்த அனைத்து போர்வீரர்களையும் நினைவுகூர்ந்து அன்றைய தினத்தின் முக்கிய நிகழ்வாக, 6 மகளிர் இராணுவ வீரர்களின் மருத்துவம், வீட்டு வசதி மற்றும் இதர தேவைகளுக்கு இலவச நிதி உதவிகள் வழங்கப்படுவதற்கான நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. சேவையின் போது உயிரிழந்த இலங்கை இராணுவ பொலிஸ் பெண் சிப்பாய் ஒருவரின் குடும்பத்திற்கு 1.2 மில்லியன் ரூபாய் நன்கொடையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுமார் 350 மகளிர் அதிகாரிகள் மற்றும் மகளிர் சிப்பாயினர் கலந்து கொண்டதுடன் முழு நிகழ்ச்சியின் அழகியல் சுவையை மெருகூட்டும் வகையில் புகழ்பெற்ற பாடல் வரிகள் எழுத்தாளர் மற்றும் இசைக்கலைஞர் திரு தம்மிக்க பண்டாரவால் இசை வாசகம் வழங்கப்பட்டது.

இதேவேளை, இலங்கை இராணுவ பொதுச்சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவு நோயாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பல்லேகலே இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் பாவனைக்காக 7 இலட்சம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்களை பரிசாக வழங்கியுள்ளது.

இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி எரங்க ஹேவாவசம், சேவை வனிதையர் பிரிவின் அங்கத்தவர்கள் சார்பாக, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவர் திருமதி சுஜீவா நெல்சனுக்கு, அந்த அத்தியாவசியப் பொருட்களை அடையாளப்பூர்வமாக அன்பளிப்பாக வழங்கினார்.

இதற்கிடையில், நிகழ்ச்சியின் முடிவில் திருமதி சுஜீவா நெல்சன் அவர்கள் திட்டத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேரலையில் ஒளிபரப்பு செய்த தெரண’ தொலைக்காட்சி அதிகாரிகள் மற்றும் குழுவினருக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியின் முடிவில், வந்திருந்த அனைவருக்கும் அன்றைய தினத்தின் நினைவாக பரிசுப் பொதி வழங்கப்பட்டன. இதற்கிடையில், வரையறுக்கப்பட்ட 'லியா தனியார் நிறுவனம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அதே இடத்தில் அழகு கலாச்சாரப் பட்டறையை நடத்தியது.

பனாகொட இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்நாள் நிகழ்ச்சியில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே, பிரிகேடியர் ஒருங்கிணைப்பு இராணுவ சேவை வனிதையர் பிரிவு பிரிகேடியர் துஷார பாலசூரிய, இராணுவ சேவை வனிதையர் பிரிவுகளின் தலைவர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.