Header

Sri Lanka Army

Defender of the Nation

04th March 2022 08:30:01 Hours

கூரகல விகாரையின் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பில் தளபதி மதிப்பாய்வு

கி.மு 2 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட வரலாற்றை கொண்டதென கருதப்படும் பலாங்கொடை கூரகல ராஜ மகா விகாரை மற்றும் அதன் மடாலயம் நீண்ட காலமாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருந்த நிலையில் அதன் தற்போது அதன் புராதன பெருமைகளை வெளிகொண்டுவரும் நோக்கிலும் நல்லிணக்கம் , நல்லெண்ண உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர், புத்த சாசன அமைச்சர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மேற்படி பௌத்த விகாரையின் மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இவ்வருடத்தின் தேசிய வெசாக் தின நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்கள் 2015 ஆம் ஆண்டு நாட்டின் பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த போது இப்பகுதிக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தோடு, அவர் ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் விகாரையின் மறுசீரமைப்பு பணிகள் திறமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். அதன்படி அதிமேதகு ஜனாதிபதி மற்றும் வண.வத்துரகும்புரே தம்மரதன தேரர் ஆகியோரின் வழிகாட்டலுக்கமைய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் மேற்பார்வையின் கீழ் படையினரால் நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளுக்கு அண்மைய பகுதிகளிலுள்ள ஆயிரக்கணக்கான பௌத்தர்களின் பங்களிப்பும் கிடைக்கப்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.

இந்நிலையில், விகாரையின் நிர்மாண பணிகளை மதிப்பாய்வு செய்வதற்கான விஜமொன்றை மேற்கொண்டிருந்த பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இப்பணிகளை வெசாக் தினத்திற்கு முன்னதாக நிறைவு செய்ய வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். மேலும் இந்த விகாரையின் மறுசீரமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு பொது மக்கள் தொண்டு அடிப்படையில் உதவிகளை வழங்க முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மறுசீரமைப்பு பணிகள் இடம்பெறும் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மறுசீரமைப்பு பணிகள் நடைபெறும் மேட்டுப் பகுதிக்கு வருகை தந்திருந்த போது பாதுகாக்கப்பப்பட்டு வரும் தொல்லியல் அம்சங்களையும் விகாரையின் பிரதான தூபியையும் பார்வையிட்டார். மேற்படி விகாரையின் தூபியானது கிமு 2 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதென வரலாற்று குறிப்புக்கள் கூறுகின்றன.

இதன்போது இராணுவ தளபதியுடன் கலந்தாலோசித்த வேளையில் வண.வத்துரகும்புரே தம்மரத்தன தேரரினால் விகாரையின் எஞ்சியுள்ள கட்டுமான பணிகள் மற்றும் வீதி கட்டமைப்புக்கள், குளங்கள், ஆகியன தொடர்பில் விளக்கமளித்ததோடு, அங்குள்ள புராதன தூபி மற்றும் கல்வெட்டுக்கள், இடிப்பாடுகள் என்பவைகளை பாதுகாக்கும் விதம் தொடர்பிலும் ஆராய்ந்த இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா , மேற்படி தளத்திற்கு யாத்திரையாக வருகை தந்திருந்த மக்களுடனும் மறுசீரமைப்பு பணிகளை முன்னெடுத்துவரும் படையினருடனும் எண்ணங்களை பகிர்ந்துகொண்டார்.

கல்தோட்டை பிரதேசமானது சிவனொலிபாத மலைத்தொடரில் இருந்து வெளியேறும் பயன்படுத்தப்படாத நீர் வளங்களைக் கொண்ட பிரதேசமாக இருப்பதால் இப்பகுதியில் வசிக்கும் பிக்குகளின் உணவுத் தேவைகளுக்கு அவசியமான அரிசி, மரக்கறி உற்பத்திகளையும் மேற்கொள்ளக்கூடிய விளைச்சல் நிலமாகவும் அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.