Header

Sri Lanka Army

Defender of the Nation

26th February 2022 22:05:33 Hours

புராதன சமயப் பிணைப்புகளை நினைவுகூரும் ‘செத்பிரித்’ பராயணம் மற்றும் இலங்கையின் 65 வது ஆண்டு விழாவில் ஆசிர்வாதம் கோரும் - சீனா இராஜதந்திர உறவுகள்

இலங்கைக்கான சீனத் தூதுவர் அதிமேதகு சீ சன்கொன்ங் மற்றும் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கை-சீன பௌத்த நட்புறவுச் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் அழைப்பாளர்கள் ஒன்று கூடி இன்று (26) காலை பௌத்த மத நிகழ்ச்சியில் 'செத்பிரித்' பாராயண நிகழ்வில் இணைந்துகொண்டனர். இலங்கை-சீன இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனாவில் உள்ள வரலாற்று பௌத்த விகாரைகளின் ஒத்துழைப்புடன் அனுராதபுரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அபயகிரிய விகாரையிலும், மருதானை இலங்கை வித்தியாலயத்திலும் ஒரே சந்தர்பத்தில் இடம்பெற்றன.

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பிராந்திய ஒத்துழைப்பு அமைச்சர் கௌரவ. தாரக பாலசூரிய இலங்கை அனுராதபுரத்தில் உள்ள அபயகிரிய விகாரை நிகழ்ச்சியில் இணைந்துக் கொண்டார். அதே நேரத்தில் சீனாவில் உள்ள இலங்கை தூதுவர் டாக்டர் பாலித கொஹோனா, சீனா பெய்ஜிங்கில் புத்தரின் தந்ததாது நினைவுச்சின்னம் உள்ள புராதன லிங் குவான் விகாரையிலும் அதே நேரத்தில் இணைந்து கொண்டார்.

இலங்கை-சீன பௌத்த நட்புறவுச் சங்கத்தின் தலைவர் திரு.சுமதி தர்மவர்தன, பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவை இத்திட்டத்தின் முக்கியத்துவம் கருதி அபயகிரிய ரஜமஹா விகாரையில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். பூக்கள் வழங்குதல், கிலான்பச பூஜை மற்றும் தேஹெத் திட்டம் தொடங்குவதற்கு வழி வகுத்தது.

அஸ்கிரிய பீடத்தின் அனு நாயக்க தேரர் வண. ஆனமடுவே ஸ்ரீ தம்மதஸ்ஸி நாயக்க தேரர், ருவன்வெலி மஹா சேய பீடாதிபதி, கலாநிதி பல்லேகம ஹேமரதன நாயக்க தேரர் மற்றும் பல பிக்குகள் அதே இடத்தில் நடைபெற்ற ‘தஹம் ஹமுவ’ நிகழ்வில் கலந்துகொண்டனர். வரலாற்று சிறப்புமிக்க அபயகிரி விகாரையின் பிரதம தேரர் கலாநிதி வண. கல்லஞ்சியே ரத்னசிறி தேரர் இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்தார்.

இலங்கை-சீன பௌத்த நட்புறவு சங்கமும், சீன பௌத்த சங்கமும் இணைந்து வரலாற்று அபயகிரி விகாரையின் பிரதம அதிதியான கலாநிதி வண. கலாஞ்சியே ரத்னசிறி தேரர் இணைந்து அபயகிரிய புனித ஸ்தலத்தை தெரிவு செய்தது. சீனாவின் வண. பாசியான் 4 ஆம் நூற்றாண்டில் வரலாற்று அபயகிரிய கோவிலில் பௌத்தத்தை பயின்றவர் மற்றும் 429 சிஇயில் பிக்குனி தேவசரா புனிதமான ஜெயஸ்ரீ மஹா போதியவின் மரக்கன்றுகளுடன் சீனாவிற்கு ஒரு தூதுக்குழுவை வழிநடத்தி சீனாவில் பிக்குனி ஒழுங்கை நிறுவினார் என்பதை பதிவுகள் உறுதிப்படுத்துகின்றன. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பௌத்த உறவுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவின் வலுவான தூண்களாக தற்போதைய இராஜதந்திர உறவுகளுக்கு முந்தியது.

இதே சந்தர்ப்பத்தில் சனிக்கிழமை (26) பெய்ஜிங்கில் உள்ள லிங் குவான் விகாரையின் வண. சாங் சாங் தேரோ மற்றும் குவாங்டாங்கின் ஜுஹாயில் உள்ள புடுவாவ் விகாரையின் அதி வண. மிங் ஷெங் தேரோ ஆகியோர் தலைமையில், சீன பௌத்த சங்கம் துறவிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் நேரலை 'பிரித்' பாராயணம் திட்டத்தில் இணைந்துக் கொண்டனர்.