22nd February 2022 06:44:32 Hours
ஊவா-குடாஓயா கொமாண்டோ படையணி பயிற்சிப் பாடசாலை வளாகத்தில் புதிதாகப் பயிற்சி பெற்ற 157 கொமாண்டோக்களின் வெளியேற்ற அணிவகுப்பு நிகழ்வன்று, கொமாண்டோ படையணி மற்றும் விசேட படையணியினை அதிகமான எண்ணிக்கையினை கொண்ட பரசூட்வீரர்கள், சனிக்கிழமை (19) முதலாவது ஏயர்மொபைல் அருங்காட்சியகத்தை திறந்துவைக்கும் நிகழ்வின் போது தங்களது வாழ்க்கை வரலாறுகள் தொடர்பான சரியான ஆவனத்தை பெற்றுக் கொண்டனர்.
கொமாண்டோ படையணியின் பரசூட் பயிற்சிப் பிரிவு 1990 ஜனவரி 29 ஆம் திகதி கணேமுல்ல கொமாண்டோ படையணி முகாமில் நிறுவப்பட்ட பின்னர் இதுவரை சேவையாற்றும் ஒரே ஒரு மூத்த பரசூட் வீரரான பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், கொமாண்டோ படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கிருஷாந்த ஞானரத்ன அவர்களின் அழைப்பின் பேரில் புதிய ஏயர்மொபைல் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.
புதிய ஏயர்மொபைல் அருங்காட்சியகத்தில் இலங்கை இராணுவத்தின் வான்வழிப் பயிற்சி மற்றும் நடவடிக்கைகளின் ஆரம்ப கட்டங்களில் பயன்படுத்தப்பட்ட அனைத்து உபகரணங்கள், ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் மற்றும் ஆதாரங்களுடன் வரலாற்று மதிப்புமிக்க அனைத்து பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அன்றைய தினம், பிரதம விருந்தினர் பலகையை திரைநீக்கம் செய்து, திறந்து வைத்து, பல சிரேஷ்ட அதிகாரிகளுடன் உள்ளே சென்றார்.
மூன்று அதிகாரிகள் மற்றும் 24 சிப்பாய்கள் கொண்ட இலங்கை பரசூட் வீரர்களின் முதல் குழுவினர் 1979 டிசம்பர் 29 இல் இந்தியாவில் உள்ள ஆக்ரா- பரசூட் பயிற்சிப் பாடசாலையில் தங்களது பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறினர். ஆனால் கொமாண்டோ படையணியின் ஸ்தாபக தலைவர் மேஜர் எஸ்டி பீரிஸ் 1 வது இலங்கை பரசூட் வீரராக வரலாற்றில் இடம்பிடித்தார். 1980 ஒக்டோபர் 10 ஆம் திகதி அந்த ஆண்டு இராணுவ தினத்தை முன்னிட்டு கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி திறந்து வைக்கும் நிகழ்வில் 1 வது இலங்கை பரசூட் வீரர் பார்வையாளர்களை கவரும் வகையில் தனது சாகசங்களை வெளிக்காட்டினார். அதேபோன்று, 1 வது இலங்கை ஸ்கைடைவர் (Skydivers) என கருதப்படும் மேஜர் என்.ஜி.சந்திரசேன, அமெரிக்காவில் ஸ்கைடைவர்ஸ் பாடத்திட்டத்தை முடித்த பின்னர், இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிக்கத் தொடங்கினார்.
1990 ஜனவரி 29 இல் கணேமுல்லையில் உள்ள கொமாண்டோ படையணி தலைமையகம் தனது பரசூட் பயிற்சிக் பிரிவினை நிறுவிய பின்னர் வரலாற்றில் முதன்முறையாக இராணுவத்தின் சிறப்புப் படைகள், இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படை வீரர்களுக்கான பரசூட் பயிற்சிக்கான சந்தர்பத்தை வழங்கியது.
இலங்கை விமானப்படையானது இராணுவத்தினரால் வழங்கப்பட்ட பயிற்சியின் முலம் இலங்கை விமானப்படையின் 1 வது பரசூட் வீரரான ஸ்குவாட்ரன் லீடர் பி.என்.ரத்னகுமாரவை உருவாக்கி வரலாற்றில் இணைத்தது. இராணுவ பரசூட் பயிற்சியினை பெற்ற லெப்டினன் யு ஐ சேரசிங்க 1992 செப்டெம்பர் 14 ஆம் திகதி இலங்கை கடற்படையின் 1 வது கடற்படை பரசூட் வீரராக வரலாற்றில் இடம்பிடித்தார்.
1992 இல் 44 வது சுதந்திர தின கொண்டாட்டத்தில், மேஜர் சமந்த சூரியபண்டாரவின் தலைமையில் இடம்பெற்ற முதல் ஸ்கைடைவர்ஸ் (skydivers) நிகழ்வு வானத்தில் கண்கவர் காட்சியுடன் இடம்பெற்றது. ஏயர்போன் பயிற்சியின் நோக்கம் நாட்டில் வளர்ந்து வரும் நிலையில், இலங்கையின் முதலாவது ஸ்கைடைவிங் பயிற்சி 1997 ஆம் ஆண்டு ஆர்வத்துடன் தொடங்கியது.பரசூட் சாகச நிகழ்வினை விரிவாக்கும் முகமாக, கணேமுல்ல கொமாண்டோ படையணி தலைமையகத்தில் அமைந்த பரசூட் பிரிவு, பின்னர் ஊவா-குடா ஓயாவில் உள்ள கொமாண்டோ படையணி பயிற்சிப் பாடசாலைக்கு மாற்றப்பட்டது.
கொமாண்டோ படையணி பயிற்சிப் பாடசாலையின் ஏயர்போன் பயிற்சிப் பிரிவு இப்போது ஸ்கைடிவிங், ஜம்ப்மாஸ்டர்கள், ரிக்கர், கேனோபி, டார்கெட் லேண்டிங் மற்றும் பேஸ் ஜம்ப் பயிற்சி தொகுதிகளை சர்வதேச தரத்திற்கு ஏற்ப நடத்துவதற்கு தகுதியாகவுள்ளது.
பல ஆண்டுகளாக, இலங்கை ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட கொமாண்டோ படைப்பிரிவின் பரசூட் பயிற்சிப் பாடசாலையயை நிறுவியதன் மூலம் இலங்கையில் பரசூட் வீரர்களின் திறமைகள் அதிவேகமாக விரிவடைந்துள்ளன. இப்பியற்சி பாடசாலையினால் அடிப்படை பரசூட் பாடநெறி, ஏயர்போர்ன் பயிற்றுவிப்பாளர் & ஜம்மாஸ்டர் பாடநெறி, ரிக்கர் பாடநெறி, காம்பாட் ஏயர்போன் & பாத்பைண்டர் பாடநெறி உள்ளிட் பயிற்சி தொகுதிகள் வழங்கப்படுகின்றன.
அவ் விழாவின் போது கொமாண்டோ படையணியின் தளபதியவர்களின் அழைப்பின் பிரகாரம் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் உடற்கட்டமைப்பு தொகுதியனையும் திறந்து வைத்தார்.
அப்போதைய 54 வது படைத் தலைமையகத்தின் பிரதி தளபதியாக 'மேஜர் ஜெனரல் பி.பி பெர்னாண்டோ அவர்கள் ஆனையிறவு போரின் போது தனது இன்னுயிரை தியாகம் செய்த 'மேஜர் ஜெனரல் பி.பி பெர்னாண்டோ அவர்களின் நினைவாக, மேஜர் ஜெனரல் பி.பி பெர்னாண்டோ நினைவு உள்ளக விளையாட்டு அரங்கம்' என பெயரிடப்பட்டுள்ளது.
அதேபோன்று 'ஜெயசிகுரு' நடவடிக்கையின் போது தனது உயிரை தியாகம் செய்த கொமாண்டோ படையணியின் 1 வது பரம வீர விபூஷண பதக்கத்தினை பெற்ற மறைந்த மேஜர் ஜி.எஸ். ஜெயநாத்தின் நினைவாக புதிய உடற்கட்டமைப்பு தொகுதிக்கு அவரின் பெயர்சூட்டப்பட்டுள்ளது .