Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd February 2022 08:24:58 Hours

புனேவில் இடம்பெற்ற 9 வது இராணுவப் பதவி நிலை இருதரப்பு பேச்சுவார்த்தையில் கூட்டு முயற்சி முன்மொழிவு

இந்திய இராணுவத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் புனேவில் உள்ள இந்திய இராணுவத்தின் பழமைவாய்ந்த மற்றும் சிறந்து விளங்கும் தெற்கு கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெற்ற மூன்று நாள் (பெப்ரவரி 10-12) கொண்ட விரிவான, சுமுகமான, பயனுள்ள 9 வது இராணுவப் பதவி நிலை இருதரப்பு பேச்சுவார்த்தை அமர்வுகளின் விடயங்கள், இலங்கைப் பிரதிநிதிகளால் இன்று (21) காலை பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

முதலாவது படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத்யபா, இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் அஜித் கொலம்பதந்திரி, பயிற்சிப் பணிப்பாளர் பிரிகேடியர் கபில டோலகே மற்றும் சமிக்ஞை பிரிகேட் தளபதி பிரிகேடியர் சஜித் லியனகே உள்ளிட்ட இலங்கை இராணுவ பதவி நிலை தூதுக்குழுவினர் இராணுவத் தளபதியுடனான சந்திப்பின் போது இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களுடன் நீடித்த, உறுதியான மற்றும் வலுவான இருதரப்பு தொடர்புகளின் முக்கியத்துவத்தை இந்திய இராணுவம் சந்தேகத்திற்கு இடமின்றி குறித்துக் காட்டிய முடிவுகளை முன்வைத்தனர். முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில், இந்தியா இராணுவம், இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியுடன் இணைந்து கூர்க்கா படையணி செயற்பட தனது விருப்பத்தை முன்வைத்ததோடு, முன்னுரிமை அடிப்படையில் முடிந்தவரை விரைவாக இதன் முன்மொழிவு கொண்டுவரப்படும் என்று இருதரப்பு பேச்சுவார்த்தை அமர்வுகளின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இரு நாட்டு இராணுவமும் வழக்கமான அடிப்படையில் பரஸ்பர உயர்மட்ட விஜயங்கள் மற்றும் செயல்பாட்டு நிலை விஜயங்களினை தொடர பரஸ்பரமாக ஒப்புக்கொண்டதுடன், இந்த ஆலோசனைகள் 2022 ஆண்டின் முதல் நடுப்பகுதியில் இந்திய இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியும், மற்றும் இலங்கை இராணுவத்தின் பொதுப்பணி பதவி நிலை பணிப்பாளர் ஆகியோருக்கிடையே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், 2022 ஆண்டின் இரண்டாம் பகுதியில் இரு படைகளின் இராணுவச் செயலாளர்களும் இதேபோன்ற பேர்ச்சுவாத்தைகளில் ஈடுபடுவார்கள் என்று இந்தியாவிலிருந்து திரும்பி வந்த தூதுக்குழுவினர் இராணுவத் தளபதியிடம் தெரிவித்தனர். அதேபோன்று, எதிர்காலத்தில் நிலையான தகவல் முகாமைத்துவ முறைமைகளை நடத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கான அமர்வுகளை நடத்த இந்திய இராணுவம் ஒப்புக்கொண்டது.

அதன்படி, 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் முதல் பழைய சிநேகபூர்வமான மன்றத்தை நடத்துவதற்கு இலங்கை இராணுவ உருப்பினர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும் இரு அமைப்புகளுக்கும் இடையேயான சகோதரத்துவத்தை வெளிக்காட்டும் வகையில் கிரிக்கெட், ஹொக்கி மற்றும் கரப்பந்து உள்ளடக்கிய இருதரப்பு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடாத்தப்படும் என எதிர்பார்கப் படுகின்றது. இராணுவத் தளபதியின் சார்பாக தூதுக்குழுவினர், இலங்கை இராணுவ தின (ஒக்டோபர் 10) நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் இந்தியா இராணுவத் தளபதி மற்றும் இந்தியா இராணுவத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு பிற்பகுதியில் திட்டமிட்டபடி 10வது இராணுவப் பதவி நிலை இருதரப்பு பேச்சுவார்த்தை அமர்வுகள் நடத்தப்படவுள்ளதுடன் இராணுவ தின கொண்டாட்டங்களில் இரு படைகளின் இராணுவ இசைக்குழுக்களின் பங்கேற்பு தொடர்பாகவும் இந்த உரையாடல்களின் போது கலந்துரையாடப்பட்டது.

கூடுதலாக, இந்தியா இராணுவம், இலங்கை இராணுவத்தின் பயிற்சி நோக்கங்களுக்காக மேலதிக பயிற்சி உபகரணங்களை (simulators) வழங்க விருப்பம் தெரிவித்ததுடன், பிரதிநிதி குழுவினர் தாங்கள் இந்தியாவில் தங்கியிருந்த போது, இந்தியா இராணுவத்தில் இருக்கும் யுத்த உபகரண மற்றும் அதன் திறன்களைப் புரிந்துகொள்ளும் முகமாக இந்திய இராணுவத்தின் உபகரண மேம்பாட்டடு பிரிவு (SDD) மற்றும் போர்கேமிங் மேம்பாட்டு மையம் (WARDEC) ஆகியவற்றை பார்வையிட்டனர். இந்தியாவில் நடந்த அனைத்து சுமூகமான அமர்வுகளும் மிகவும் தகவல் மற்றும் உற்பத்தித் தன்மைகளை கொண்டவை என்றும், இரு அமைப்புகளுக்கும் இடையே நிலவும் ஆழமான புரிதல் மற்றும் அந்த உறவுகளை மேலும் மேம்படுத்தி, புதிய நிலைக்கு கொண்டு வர இரு இராணுவத்தினரின் உறுதியான விருப்பத்தை பிரதிபலிக்கும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை குழுவினர் இலங்கை கெடட் அதிகாரிகள் விதிவிலக்கான திறமைகளை வெளிக்காட்டிய இந்திய இராணுவத்தின் இராணுவ தொழில்நுட்ப நிறுவனம், தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் இராணுவ பொறியியல் ஆகியவற்றையும் பார்வையிட்டனர். அனைத்து விடயங்களையும் பொறுமையாகக் கேட்டறிந்த பின்னர், கொவிட் 19 கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு மத்தியிலும் இராணுவப் பதவி நிலை இருதரப்பு பேச்சுவார்த்தை இரு படையினர்களின் வலுவான மற்றும் சுமூகமான பணி உறவுகளைத் தொடர்ந்து

பிரதிபலிப்பதால், இரு படையினர்களின் நலனுக்காகவும் அந்த முடிவுகள் மற்றும் பரிந்துரைகளைப் பின்பற்றுமாறு தூதுக்குழுவிற்கு ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவுறுத்தினார். புனேவில் நடந்த 9 வது இராணுவப் பதவி நிலை இருதரப்பு பேச்சுவார்த்தையில் இந்திய இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மேலதிக உள்ளக கூற்றுறவு பணிப்பாளர் நாயக இணைத் தலைவர் மேஜர் ஜெனரல் அனில் குமார் காஷித், பீரங்கிப் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனூப் ஜாகர்,பிரிகேடியர் காலாட்படையணி பிரிகேடியர் கௌரவ் கௌதம், வெளிநாட்டுப் பயிற்சி அதிகாரி கேணல் ஐ.பி. சிங், மற்றும் கேணல் பாதுகாப்பு மற்றும் இணைச் செயலாளர் கேணல் ஹெச் பாரத்நகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.