Header

Sri Lanka Army

Defenders of the Nation

19th February 2022 19:06:52 Hours

இணையற்ற திறன்களைக் கொண்ட புதிய 157 கொமாண்டோ வீரர்களின் வெளியேற்ற அணிவகுப்பு நிகழ்வு

தரையிறங்கள், பரசூட் பாய்தல் , மற்றும் ஏனைய விதிவிலக்கான தனித்துவமான நிபுணத்துவம் பெற்ற இலங்கை இராணுவத்தின் மேலும் ஒரு உயர் சிறப்பு நடவடிக்கை பிரிவாக திகழும் கொமாண்டோ படையணியின் நன்கு பிற்சியளிக்கப்பட்ட 157 படை வீரர்களின் வெளியேற்ற அணிவகுப்பு நிகழ்வு ஊவா-குடாஓயா கொமாண்டோ படையணி பயிற்சி பாடசாலை வளாகத்தில் சனிக்கிழமை (19) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கொமாண்டோ படையணியின் 48 D & E 2022 இன் பாடநெறியினை சேர்ந்த 13 அதிகாரிகள் மற்றும் 144 சிப்பாய்கள், பல வீரர்கள் மற்றும் பயிற்றுனர்களின் வழிகாட்டுதலின் கீழ் 18 மாதங்கள் கொண்ட சிறப்பான பயிற்சியினை பெற்றுக்கொண்டதுடன் அவர்களின் அற்புதமான மற்றும் தனித்துவமான திறன்களையும், முன்னெப்போதும் இல்லாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் செயல்பாட்டு நுட்பங்களையும் இறுதியாக வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.

அன்றைய பிரதம அதிதியான பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை கொமாண்டோ படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன அவர்களினால் கொமாண்டோ பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியாராச்சி, கொமாண்டோ படையணியின் நிலையத் தளபதி கேணல் தர்மவர்தன மற்றும் கொமாண்டோ படையணி பயிற்சி பாடசாலையின் தளபதி கேணல் ஜானக சமரசேகர ஆகியோருடன் இணைந்து வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, நுழைவாயிலில் இராணுவ சம்பிரதாய முறையின்பிரகாரம் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டது.பின்னர், அணிவகுப்புத் தளபதியால் பிரதம அதிதி அன்றைய அணிவகுப்பை மறுபரிசீலனை செய்வதற்காக அழைக்கப்பட்டார், இதனை தொடர்ந்து பயிற்சி நிறைவில் வெளியேறும் வீரர்களால் கம்பீரமான கெளரவ மரியாதையானது தளபதிக்கு வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து வெளியேறும் துணிச்சலான கொமாண்டோக்களின் அக்கறையுள்ள பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் “சாத்தியமற்றது எதுவுமில்லை” என்பதை”” நிரூபிக்கும் முகமாக மதிப்புமிக்க கொமாண்டோ சின்னத்தை அணிவிக்க அழைக்கப்பட்டனர்.

அன்றைய நிகழ்வின் பட்டதாரிகளுக்கு குறிப்பிட்ட அடையாளம், அதிகாரம் மற்றும் முழு அளவிலான தொழில் நிபுணத்துவத்தின் அடையாளமாக திகழும் 'மெரூன் பெரட்' விருதினை பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வழங்கினார். இதன்போது கொமாண்டோ படையணியின் நிலையத் தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன மற்றும் 65 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி ஆகியோர் இணைந்துகொண்டனர்.'மெரூன் பெரட்' என்பது அதனை அணியும் படை வீரர் போர்க்காலத்திலும் அமைதிக் காலத்திலும் இலங்கையின் அரசியலமைப்பு ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் வான், நிலம் அல்லது நீர்- ஆகியவற்றைச் செயல்படுத்தும் போது, இயற்கையில் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தயார்படுத்தப்பட்ட ஒரு உயரடுக்கு மூலோபாயப் படையணியைச் சேர்ந்தவர் என்பதைக் குறிக்கிறது.

அதனைத் தொடர்ந்து 18 மாத கால கொமாண்டோ பயிற்சி முடிவின் போது தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்திய பட்டதாரிகளுக்கு பாராட்டு சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதன் போது சிறந்த கொமாண்டோ மற்றும் சிறந்த துப்பாக்கி சுடும் வீரருக்கான விருது லெப்டினன்ட் டி.எம்.சி.எம்.பி தென்னகோனுக்கு வழங்கப்பட்டதுடன், சிறந்த உடற்பயிற்சிக்கான விருது இரண்டாவது லெப்டினன் சி.எல்.ஜயதுங்கவுக்கும் வழங்கப்பட்டது.தொடர்ந்து பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ஆற்றிய உரையில் திறமைகளைப் பாராட்டி, மிகவும் போற்றப்படும் காலாட்படை வீரர்களின் குடும்பத்தின் உறுப்பினர்களாக வெளியேறும் முன்னோடியில்லாத மற்றும் பல வழிகளில் தனித்துவமான பட்டதாரிகளுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். "நீங்கள் மிகவும் போற்றப்படுகின்ற மற்றும் மிகவும் மதிக்கப்படுபவர்களாக காணப்படுவதுடன், மேலும் நாட்டைப் பாதுகாப்பதில் நீங்கள் ஒரு விதிவிலக்கான பணியினை ஆற்றுவீர்கள் என்று எமது தேசம் எதிர்பார்க்கிறது" என்று இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

நீங்கள் "ஒரு கொமாண்டோ வீரராக இருப்பது எளிதான காரியம் அல்ல, அதற்கு கெமாண்டோக்களின் "சாத்தியமற்றது எதுவுமில்லை" என்ற தொணிப்பொருளின் கீழ் நிலையான தைரியமும் உற்சாகமும் தேவை, ஏனெனில் நீங்கள் அனைவரும் இப்போது உங்கள் இதயங்களில் தழுவிய, தேசத்தின் பாதுகாவலர்களாக எப்போதும் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த துணிச்சலான கருப்பொருளின் கீழ் தாய்நாட்டின் நலனுக்கான செயற்பட வேண்டும், நான் கொமாண்டோ படையணி, கொமாண்டோ பிரிகேட்டின் முன்னாள் தளபதியாகவும் மற்றும் வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளின் போது 58 வது படைப்பிரிவின் தளபதியாக இருந்த போது நான் கொமாண்டோக்களின் தனித்துவத்தையும் அவர்கள் எந்தளவுக்கு இருந்தார்கள் என்பதையும் உணர்ந்தேன். சவால்கள் இருந்தபோதிலும் உங்கள் திறமைகளை மேலும் மேம்படுத்துவதன் மூலம் விரிவான பயிற்சிக்குப் பிறகு நீங்கள் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள், "என்று அவர் கருத்து தெரிவித்தார்.

புதிய கொமாண்டோக்களை அவர்களின் பயிற்சிக் காலத்தில் நிலவிய உடல்நலக் கோளாருகளைப் பொருட்படுத்தாமல், அவர்களை ஒழுங’குபடுத்தியதற்காக படைப்பிரிவின் தளபதி, பிரிகேட் தளபதி, நிலையத் தளபதி மற்றும் கொமாண்டோ படையணியின் பாடசாலையின் தளபதி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார், அவர்களுக்கு எப்பொழுதும் அளிக்கப்பட்ட ஆதரவையும், ஆசிகளையும், தவறாத ஆதரவையும் நினைவுபடுத்தினார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) ஆகியோரால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்களையும் இதன்போது நினைவுகூர்ந்தார்.

தற்போதைய "இலங்கை இராணுவ முன்நகர்விற்கான வியூகம் 2020-2025" திட்டத்திற்கமைய இராணுவம் அரசாங்கத்தால் கிடைக்கப்பெறும் வசதிகளுடன் இராணுவத்தின் தொடர்ச்சியான பயிற்சி, நலன் மற்றும் பிற எதிர்கால பணிகள் ஆகியவற்றிலும் பெரும்பாலும் கவனம் செலுத்தும். உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலை வேகமாக மாறி வரும் இந்த நேரத்தில் துணிச்சலான மகன்களின் இந்த புதிய பிரிவை வளர்ப்பதில் காட்டப்படும் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்காக அனைத்து பயிற்றுனர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். மேலும் அன்றைய தின நிகழ்வுக்கு அமைவாக, அனைத்து பட்டதாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் தளபதியுடன் குழு புகைப்படங்கள் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டனர்.

கொமாண்டோ படையணியின் பயிற்சி பாடசாலையின் பயிற்சி பகுதியில் இடம்பெற்ற அன்றைய திகைப்பூட்டும் காட்சியில் பார்வையாளர்கள் அவர்களின் துணிச்சலான திறமைகளை உருவகப்படுத்தப்பட்ட நிகழ்வுகளையும் வெளிப்படுத்தியதைக் காணக்கூடியதாகவும் இருந்தது.துப்பாக்கி சுடும் செயல்விளக்க நிகழ்வுகள், உண்மையான போர் நுட்பங்கள், விஐபி பாதுகாப்பு காட்சிகள், பணயக்கைதிகள் மீட்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு செயல் விளக்கம், துப்பாக்கிச் சூடு செயல் விளக்கம் நிகழ்வுகள், கே9 (போர் நாய்கள்) - கையாளுதல் காட்சி மற்றும் பரசூட் காட்சி போன்றன அன்றைய நிகழ்வில் இடம்பெற்றன. அழைப்பு விடுக்கப்பட்டவர்கள், போர்வீரர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.