18th February 2022 16:30:59 Hours
இலங்கைக்கான பாக்கிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்கி, ஹிலால்-ஐ-இம்தியாஸ் அவர்கள், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை வெள்ளிக்கிழமை (18) பிற்பகல் இராணுவத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
இருவருக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் இரு நாடுகளுக்கும் இடையில் பல வருடங்களாக நிலவும் நட்புறவுகள் மற்றும் தற்போதைய பரிமாற்ற நிகழ்ச்சிகள் குறிப்பாக இரு நாடுகளின் பயிற்சி பரிமாற்ற தொகுதிகளில் ஆயுதப்படைகளின் பங்கேற்புடனான நிகழ்ச்சிகளினையும் நினைவுகூர்ந்தார்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா புதிய உயர்ஸ்தானிகரின் நியமனத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் அவருக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தார். பின்னர் இருவருக்குமிடையில்நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேனல் முஹம்மது சப்தாரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.