Header

Sri Lanka Army

Defender of the Nation

18th February 2022 09:31:29 Hours

அவுஸ்திரேலியா பாதுகாப்புத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் இராணுவத் தளபதியை சந்திப்பு

தற்போது இலங்கையில் உள்ள அவுஸ்திரேலியா பாதுகாப்புத் திணைக்களத்தின் சர்வதேச கொள்கைப் பிரிவின் குலோபல் இன்டரஸ்ட் கிளையின் உதவிச் செயலாளர் திரு டொம் மனடூ அவர்கள் , இலங்கையில் உள்ள அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் அதிதேகு டேவிட் ஹோலி, அவுஸ்திரேலிய உயர் ஸ்தானி காரியாலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஐயன் கெய்ன் ஆகியோர்களுடன் இணைந்து பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை ஸ்ரீ ஜயவர்தனபுரம் இராணுவத் தலைமையகத்தில் வியாழன் (17) சந்தித்தார்.,

இருதரப்புத் தொடர்பு, பிராந்திய நலன், பாதுகாப்பு ஒத்துழைப்பு, கொவிட் 19 தடுப்புப் பணிகள் மற்றும் தெற்காசிய நாடுகளுடன் எப்போதும் வளர்ந்து வரும் பாதுகாப்பு புரிந்துணர்வு தொடர்பான விடயங்கள், இந்த சுமுக சந்திப்பின் போது மதிப்பாய்வு செய்யப்பட்டன. மேலும் இரு நாடுகளுக்குமிடையில் தொடர்ந்து நல்லெண்ணப் பிணைப்புகளை மேம்படுத்துவதற்கு அனைவரும் ஒப்புதல் வழங்கியதோடு எதிர்காலத்தில் பிராந்திய அமைதியின் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டன.வருகை தந்த குளோபல் இன்டரஸ்ட்ஸ் கிளையின் உதவிச் செயலர், தெற்காசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நாடுகளுடனும், நேட்டோ மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகளுடனும் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு உறவை வழிநடத்துவதுடன் மேலும் அவுஸ்திரேலியாவின் அமைதி காக்கும் நடவடிக்கைகள் என்பனவும் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடலின் முடிவில், ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் செய்த அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புத் திணைக்களத்தின் சர்வதேச கொள்கைப் பிரிவின் குலோபல் இன்டரஸ்ட் கிளையின் உதவிச் செயலாளர் திரு டொம் மனடூ அவர்களுக்கு நினைவு சின்னம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் இராணுவத் தளபதியின் அலுவலகத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக, வரவேட்பு பதிவேட்டு புத்தகத்தில் தனது என்னங்களையும் பாராட்டுக்களையும் பதிவு செய்தார்.

பாதுகாப்புத் துறையில் சேர்வதற்கு முன்னர் திரு டொம் மனடூ வெளியுறவு மற்றும் வர்த்தகத் திணைக்களத்தில் நீண்ட காலம் பணியாற்றினார். 2020-21 இல் நெருக்கடிக்கான தயார்நிலை மற்றும் கிளையின் தலைமைத்துவ உதவிச் செயலாளராக வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையில் அவரின் பங்கு இருந்தது. இந்த நிலையில், அவுஸ்திரேலியர்கள் தாயகம் திரும்ப உதவுவது உள்ளிட்ட கொவிட்-19 நெருக்கடிக்கு வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையின் தூதரகப் பதிலைத் தலைமை தாங்குவதில் அவர் முக்கியப் பங்காற்றினார். ஒக்டோபர் 2017 முதல் 2020 வரை, அவர் தூதரக தகவல் மற்றும் தொடர்புப் பிரிவின் பணிப்பாளராகவும் பணியாற்றினார், மேலும் ஸ்மார்ட் டிராவலர் இணையதளம் மூலம் அரசாங்கத்தின் பயண ஆலோசனை சேவையையும் நிர்வகித்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.