Header

Sri Lanka Army

Defender of the Nation

17th February 2022 19:22:05 Hours

நவம் பெரஹெர யானையின் மேல் உள்ள புனித கலசத்திற்கு இராணுவத் தளபதி மூலம் மலர் காணிக்கை

நவம் பௌர்ணமி தினத்தன்று (16) மாலை புனித கலசம் வைக்கும் ஹுனுப்பிட்டி கங்காராமய விகாரையின் இறுதி நவம் பெரஹரா நிகழ்வின் பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு 43 வது வருடமாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகிறது.

சமய சடங்குகள் மற்றும் ஆசீர்வாதங்களுக்குப் பிறகு, அதிமேதகு ஜனாதிபதி முதல் பெண்மணி திருமதி அயோமா ராஜபக்ஷவுடன் இணைந்து , புனிதப் கலசத்தினை யானையின் மீது வைத்து, தனது வணக்கத்தை செலுத்தினார்.

அதே நேரத்தில், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோர் இணைந்து புனித திருமஞ்சன கலசத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இறுதி அணிவகுப்பின் ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற சபாநாயகர், அமைச்சர்கள், கடற்படைத் தளபதி, வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் ஏனைய அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கங்காராம விகாரை விஹாராதிகாரி கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர் அவர்களினால் தலைமை விகாராதிபதி வென் கலபொட ஞானிஸ்ஸர நாயக்க தேரர் மற்றும் மகா சங்கத்தினரின் அனுசரணையின் கீழ் இவ்வருட நவம் பெரஹரா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.