Header

Sri Lanka Army

Defender of the Nation

15th February 2022 15:30:13 Hours

இராணுவத்தினரின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்குவதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட "விரு அபிமான்" வீட்டுக்கடன் திட்டம் ஆரம்பம்

இராணுவ தளபதியின் எண்ணக்கருவுக்கமைவான இராணுவத்தின் முன்நகர்வுக்கான மூலோபாய திட்டமிடல் 2020 – 2025 இற்கு இணங்க இலங்கை இராணுவத்திலுள்ள ஒவ்வொரு சிப்பாயும் தங்களது ஓய்வூதிய வயதை எட்டும் போது அவர்களுக்கான சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்ட “விரு அபிமன்” வீட்டுக் கடன் திட்டம் மக்கள் வங்கியுடன் இணைந்து இன்று காலை (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் வகையில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்‌ஷ ஆகியோரிடையே இன்று (15) காலை இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது ஒப்பந்தமொன்றும் கைசாத்திடப்பட்டது. இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.

இந்த வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ், ஒரு இராணுவ விண்ணப்பதாரர் ஆண்டுக்கு 9% வட்டிவீத அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.15 மில்லியன் பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு வழங்கப்படும் மொத்த கடன் தொகையில் 75% கடன் தொகையினை வீடு நிர்மாணிக்கப்படவுள்ள காணியின் பெறுமதி மற்றும் புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான மேற்கொண்டுள்ள மதிப்பீடு என்பவற்றின் அடிப்படையில் பெற்றுகொள்ள முடியும். மாறாக ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றை கொள்வனவு செய்வதற்கான விண்ணப்பதாரர் மதிப்பீட்டு தொகையில் 75% சதவீதத்தை பெற்றுக்கொள்ள முடியும். விண்ணப்பதாரர் வீட்டு திட்ட தொகுதியின் ஒரு பகுதியினை கொள்வனவு செய்ய வேண்டுமாயின் அதன் பெறுமதியின் 60% கடன் தொகையை பெற்றுகொள்ள முடியும்.

அதேபோல், குறித்த கடன் வசதிகளை பெற்றுக் கொள்ளும் நபர் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற காலத்திலிருந்து 70 வயது வரைக்கும் கடன் தொகையை மீண்டும் செலுத்த முடியும் என்பது இத்திட்டத்தின் தனித்துவ அம்சமாகும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட 5 கட்டிட நிர்மாண வீட்டு வரைபட வடிவங்களின் கீழ் இராணுவ பொறியியல் சேவைப் படையணியின் படையினர் வீட்டின் நிர்மாண பணிகளை பூர்த்தி செய்து கொடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளனர். கடனுக்கான ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் விண்ணப்பதாரியின் பகுதிகளிலுள்ள பொறியியல் சேவை குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

நிதி முகாமைத்துவ பணிப்பக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர அவர்கள் நலன்புரி பணிப்பகம், ஆளணி நிர்வாக பணிப்பகம், மக்கள் வங்கி மற்றும் ஏனைய தொடர்புடைய அமைப்புக்களுடன் இணைந்து இக் கடன் திட்டத்தை இராணுவத் தளபதியின் ஆலோசனைக்கமைவாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்தார். ஒவ்வொரு சிப்பாயும் பணியில் இருக்கும் போதும் மற்றும் ஓய்வு பெற்ற பின்னர் தேசத்தின் நலனுக்காக பணியாற்றியவர்கள் என்ற வகையில் அவர்கள் எதிர்காலம் கண்ணியமாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தை கருத்தில் கொண்டு இராணுவத் தளபதி இயங்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்த பின்னர் இராணுவ வீரர்களுக்கு தனியான திட்டமாக இந்த கடனை வழங்குவதற்கு இலங்கை இராணுவ நலன்புரி பணிப்பகம் மக்கள் வங்கியுடன் தொடர்பினை பேணிவரும்.

இராணுவத் தலைமையகத்தில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற அறிமுக நிகழ்வில், மக்கள் வங்கியின் தலைவர் திரு. சுஜீவ ராஜபக்ச அவர்கள் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் “விருஅபிமான்” வீட்டுக் கடன் திட்ட ஒப்பந்தத்தை முறைப்படி கையளித்தார். அதேநேரம், இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜெனரல் ஷவேந்திர சில்வா, கனவு இல்லத்தை நனவாக்க விரும்பும் அனைத்து இராணுவ வீரர்களும் இந்தக் கடன் திட்டத்தினூடாக நிச்சயமாகப் பயன் பெறமுடியும் எனத் தெரிவித்தார். நமது ஆயுதப் படைகளின் பங்கிற்கு விதிவிலக்கான மதிப்பைச் சேர்த்த இந்த ஏற்பாட்டிற்காக மக்கள் வங்கிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

வைபவத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதியவர்கள் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் வரவேற்கப்பட்டதுடன், மஙகள விளக்கை ஏற்றிய பின்னர் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றிய சுருக்கமான வைபவம் ஆரம்பமானது. அன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்தில், “விருஅபிமான்” கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில், திட்டம் பற்றிய வீடியோ ஆவணப்படம் மற்றும் முன்மொழியப்பட்ட 5 வகையான வீடுகள் ஒவ்வொன்றிற்கும் உரிய செலவும் திரையிடப்பட்டது.

மக்கள் வங்கியின் பொது முகாமையாளர் திரு.சுஜீவ ராஜபக்ஷ, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும்லியனகே, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத்கொடிதுவக்கு, இலங்கை இராணுவத் தொண்டர் படையின் தளபதி மேஜர் ஜெனரல் சன்னவீரசூரிய, நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல, நலன்புரி பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் நிஷ்யங்க எரியகம, மக்கள் வங்கியின் அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.