Header

Sri Lanka Army

Defender of the Nation

13th February 2022 06:24:25 Hours

இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் உணவு தயாரிப்பு செயற்பாடுகள் தொடர்பில் இராணுவ தளபதி மேற்பார்வை

வெஹெராவில் உள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி தலைமைகத்திற்கான நேரடி விஜயமொன்றை இன்று (12) காலை மேற்கொண்டிருந்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா படையணி தலைமையகத்தின் படையினருக்கான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை தயாரிக்கும் முறை தொடர்பில் ஆராய்தார்.

சிப்பாய்களின் உணவகத்தில் காய்கறிகள், மசாலாப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள் எவ்வாறு நறுக்கப்பட்டு, உணவு தயாரிக்கப்படுகின்றன என்பதை கண்காணித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, அங்கு சமைக்கப்பட உணவு வகைகளின் தரத்தினை மதிப்பிடும் முகமாக சமைக்கப்பட உணவு வகைகளை சுவைத்த பின்னர் அங்குள்ள சமையல்காரர்கள் மற்றும் சமையலறை ஊழியர்களுடன் உணவு தயாரிப்பு தொடர்பில் எண்ணங்களை பகிர்ந்துகொண்டார்.

அதனையடுத்து சமையலறையின் சுகாதார தரம் தொடர்பில் ஆராய்ந்த தளபதியவர்கள் அங்குள்ள உலர் உணவு களஞ்சிய பகுதி மற்றும் மசாலாப் பொருட்கள் தயாரிப்பு தொடர்பிலும் ஆராய்ந்தார்.

பின்னர் படையினர் உணவுவருந்துவதற்கான பகுதிகளை மேற்பார்வை செய்த தளபதி இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி தலைமையகத்தின் கோப்ரல்களுக்கான பிரிவினையும் மேற்பார்வை செய்தார்.

தேசத்தின் நலனுக்காக 24 மணி நேரமும் சேவையாற்றும் அனைத்து இராணுவ வீரர்களுக்கும், சிறந்த சுகாதார முறைமைகளை பின்பற்றி அவசியமான ஊட்டச் சத்துக்களுடன் கூடிய உணவுகளை வழங்கும் செயற்பாடுகள் கண்ணியமான வகையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதில் இராணுவ தளபதி உறுதியாகவுள்ளார்.

இராணுவ தளபதியின் மேற்படி விஜயத்தின் போது படையணி தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.