07th February 2022 16:48:01 Hours
இலங்கை இராணுவத்தில் 34 ஆண்டுகளுக்கும் மேலான சேவையை பூர்த்தி செய்து ஓய்வுபெற்றுச் செல்லும் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷ்டி ஜயசிங்க அவர்களுடன் அவரது குடும்பத்தாருக்கும் இராணுவ தலைமையகத்திலுள்ள தனது அலுவலகத்துக்கு இராணுவ தளபதியவர்களினால் திங்கட்கிழமை (7) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மேற்படி அதிகாரி அவரது சேவைக்காலத்தில் குறிப்பிடத்தக்க பல நியமனங்களை வகித்துள்ளார். இந்த நியமனங்களின் போதான அவரது பணிகளுக்கு பாராட்டு தெரிவித்த இராணுவ தளபதி, அவரது அர்பணிப்பு மற்றும் நேர்மையுடன் மற்றும் உண்மையுள்ளவராக பணியாற்றியிருந்தமைக்கும் பாராட்டு தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலின் போது ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கேட்டறிந்துக் கொண்ட இராணுவ தளபதி அவரது குடும்பத்தினருடனும் எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். மேலும் அவர்களிடம் சுக துக்கங்களை விசாரித்த இராணுவ தளபதியவர்கள் அவர்களின் கல்விச் செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.
அதனையடுத்து ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியவர்கள், தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு இராணுவ தளபதியவர்களிடமிருந்து கிடைத்த ஊக்குவிப்புக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, அவர் வழங்கிய அறிவுரைகளுக்கும் நன்றி தெரிவித்தார். பின்னர் ஓய்வு பெற்றுச் செல்லும் சிரேஷ்ட அதிகாரிக்கு ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் விஷேட நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.