06th February 2022 14:30:35 Hours
இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியான திருமதி லதா மங்கேஷ்கரின் மறைவையிட்டு, பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே அவர்களுக்கு அனுப்பிய இரங்கல் செய்தியில் இந்தியாவின் சீமாட்டியென அழைக்கப்படும் அவரது இசைத்துறைக்கான பங்களிப்பானது அனைத்து இலங்கையர்கள் மனங்களிலும் நீங்காத இடம்பிடித்துள்ளதென குறிப்பிட்டுள்ளார்.
முப்பத்தாறுக்கும் மேற்பட்ட மொழிகளில் 30,000 க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள மறைந்த லதா மங்கேஷ்கர் சில சிங்களப் பாடல்களையும் பாடி இலங்கையையும் கௌரவித்துள்ளார். மேலும் அவை 1950 மற்றும் 1960 களின் பிற்பகுதியில் இலங்கையில் வெளிவந்த பிரபலமான வெற்றிப் பாடல்களாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆசிய முழுவதிலும் ஆதிக்கம் செலுத்திய அவரது இசை திறன் இலங்கையை ஆட்கொண்டது ஆச்சரியத்துக்குரியதல்ல, அவரது மிதமான குரல் இலங்கை இசை ஆர்வளர்களின் மனங்களை கவரந்துள்ளது. அந்த இனிமையான குரல் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதோடு அவரது தனித்துவம் மிக்க குரல் ஓயாமல் ஒலித்துகொண்டே இருக்குமெனவும் ஜெனரல் ஷவேந்திர சில்வா கருத்து தெரிவித்தார்.
மேற்படி இரங்கல் செய்தியின் பிரதி இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அதிமேதகு கோபால் பாக்லே அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (6) முதல் இரண்டு நாட்கள் தேசிய துக்க தினமாக இந்திய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இதன் போது நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது இறுதிச்சடங்கு முழுமையான அரச மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை மும்பையில் நடைபெறவுள்ளது.